சேனைக்கிழங்கு பொரியல்
Page 1 of 1
சேனைக்கிழங்கு பொரியல்
தேவையான பொருள்கள்:
சேனைக்கிழங்கு = அரைகிலோ
பச்சை மிளகாய் = 5
வெங்காயம் = 2
இஞ்சி = காலங்குலம்
எலுமிச்சை சாறு = அரை ஸ்பூன்
தேங்காய் துருவல் = 3 ஸ்பூன்
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 2 ஸ்பூன்
எண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
சேனைக்கிழங்கு முற்றியதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தொண்டையில் கமறும். ஆகையால் சேனைக்கிழங்கு வாங்கும் போதே வெட்டிய பகுதி சிவப்பு நிறமாக இருக்கும் படியாக பார்த்து வாங்கவும். பெரிய கிழங்கில் வெட்டி வாங்கினால் அநேகமாக முற்றலாக இருக்கும்.
சேனைக்கிழங்கை தோல் சீவி விட்ட பின் பொடியாக புளியங்கொட்டை சைசில் வெட்டிக் கழுநீரில் சிறிது நேரம் போட்டு வைக்கவும். அப்போது தான் அதில் இருக்கும் கரகரப்பு அகலும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி இவற்றை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துப் பின் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
இவை நன்றாக வதங்கியதும் கழுநீரில் கிடக்கும் சேனைக்கிழங்கைப் பிழிந்து சேர்த்து வதக்கவும். சிறிது வதக்கி ஒரு கப்பிற்கு குறைவாக தண்ணீர் விட்ட பின் மூடி வைக்கவும். உப்பு சேர்த்து மூடவும்.
சாதாரணமாக சேனைக்கிழங்கிற்கு முற்றலாக இருந்தால் ஒரு கப் தண்ணீர் வேக வைக்கத் தேவைப்படும். ஆகையால் கிழங்கிற்கு தகுந்தாற் போல் தண்ணீர் விட்டுக் கொள்ளவும். இடை இடையே திறந்து கிளறி விட்டுக் கொண்டு 10 நிமிடம் வேக விடவும்.
கிழங்கு வெந்ததும் எலுமிச்சைச்சாறு, தேங்காய் துருவல் சேர்த்து கொத்தமல்லி கிள்ளி சேர்த்து வதக்கி இறக்கி விடவும்.
சுவையான சேனைக்கிழங்கு பொரியல் தயார். இதை ரைஸ் குறிப்பாக வற்றல் குழம்பு, சப்பாத்தி ஆகியவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
சேனைக்கிழங்கு ஒரு குறைந்த கொழுப்பு உணவு. நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே அது கொழுப்பின் அளவை குறைக்கிறது. உடல் எடை, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவற்றை குறைக்கும்.
எனவே இதை சமைத்து சாப்பிட்டு ஆரோக்கியத்தை பெறவும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» சேனைக்கிழங்கு பொரியல்
» சேனைக்கிழங்கு பொரியல்
» முள்ளங்கி பொரியல்
» சௌசௌ பொரியல்
» பாகற்காய் பொரியல்
» சேனைக்கிழங்கு பொரியல்
» முள்ளங்கி பொரியல்
» சௌசௌ பொரியல்
» பாகற்காய் பொரியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum