பாகிஸ்தானுடன் விளையாடுவது தேவை தானா? பால்தாக்கரே கண்டனம்!
Page 1 of 1
பாகிஸ்தானுடன் விளையாடுவது தேவை தானா? பால்தாக்கரே கண்டனம்!
நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராகவே உள்ளது. இந்த நிலையில் அந்நாட்டுடன் விளையாடுவது தேவை தானா? இந்த முடிவுக்காக கிரிக்கெட் வாரியத்தினரை மும்பை தாஜ் ஓட்டல் முன்பும், சி.எஸ்.டி ரெயில் நிலையம் முன்பும் சவுக்கால் அடிக்க வேண்டும் என சிவசேனா தலைவர் பால்தாக்கரே கிரிக்கெட் சபைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையே 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகிறது. பாகிஸ்தான் அணி டிசம்பர்- ஜனவரி மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு இருபது-20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான முடிவை கிரிக்கெட் சபை சமீபத்தில் அறிவித்தது.
இந்த நிலையில் பாகிஸ்தானுடன் விளையாடு வதற்காக சிவசேனா தலைவர் பால்தாக்கரே கிரிக்கெட் வாரியத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுடனான போட்டிக்கு முன்னாள் அணித் தலைவரும், மும்பையை சேர்ந்தவருமான கவாஸ்கர் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» டக்ளஸுக்கு கருணாநிதி கண்டனம்
» பாகிஸ்தானுடன் சுமுக உறவு இல்லை': மன்மோகன் சிங்
» குட்டி இதயமே நலம் தானா?
» மீண்டும் சிம்பு-நயன்; வதந்தி தானா?
» ”காதல் தோல்வி என்றால் நான் தானா” - தனுஷிடம் சீறிய நயன்தாரா?
» பாகிஸ்தானுடன் சுமுக உறவு இல்லை': மன்மோகன் சிங்
» குட்டி இதயமே நலம் தானா?
» மீண்டும் சிம்பு-நயன்; வதந்தி தானா?
» ”காதல் தோல்வி என்றால் நான் தானா” - தனுஷிடம் சீறிய நயன்தாரா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum