விஜய்குமாரின் கொந்தளிப்புக்கு பணிந்தது இந்திய ராணுவம்!
Page 1 of 1
விஜய்குமாரின் கொந்தளிப்புக்கு பணிந்தது இந்திய ராணுவம்!
0
இந்திய இராணுவத்தை சேர்ந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இராணுவ வீரருக்கு பதவி உயர்வு எதுவும் அளிக்கப்படாத நிலையில், அவர் கொந்தளிப்புக்கு உள்ளானதால், அவர் கேட்பவற்றை அளிப்பதாக பணிந்துள்ளது இந்திய இராணுவம்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றவர் இந்திய வீரர் விஜய்குமார்.
இந்த நிலையில் 6 ஆண்டுகளாக இந்திய ராணுவம் தரப்பில் பதவி உயர்வு எதுவும் வழங்கப்படாததை அடுத்து அதிருப்தி அடைந்துள்ள விஜய்குமார், ராணுவத்தில் இருந்து விலகப்போவதாக அறிவித்தார்.
பல பதக்கங்களை வென்றாலும், நான் சுபேதாராகவே பணியாற்றி வருகிறேன். சிறப்பாக செயல்படும் ஒருவருக்கு மூத்த அதிகாரிகளால், பதவி உயர்விற்கு பரிந்துரைக்கப்பட வேண்டும். ஆனால் எனக்கு எந்த பதவி உயர்வும் அளிக்கப்படவில்லை என குறிப்பிட்ட அவர் 2010 காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஹரியானா, பஞ்சாப் உட்பட பல மாநிலங்கள் பதவி உயர்வை வழங்கியதை சுட்டிக்காட்டினார்.
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பிறகு கூட எனக்கு பதவி உயர்வு வழங்க மறுத்தால் ராணுவத்தில் இருந்து விலகி விடுவேன் என்று அவர் எச்சரித்ததால் விஜய் குமாரை சமாதானப்படுத்தி, பதவி உயர்வு மற்றும் ரொக்க பரிசு வழங்கப்படும் என்று இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» 1989 வல்வெட்டித்துறையில் இந்திய ராணுவம் செய்த தமிழர் படுகொலைகள்!!
» இந்திய எல்லைக்குள் சீன ராணுவம், ஊடுருவல்! சீனப் படைகள் வாபஸ் பெறுவற்கு எந்த அறிகுறியும் இல்லையாம்!
» கடைசி டெஸ்டிலும் வெற்றி பெற்று புதிய சரித்திரம் படைத்தது, இந்தியா 3–வது நாளிலேயே பணிந்தது ஆஸ்திரேலியா
» கடைசி டெஸ்டிலும் வெற்றி பெற்று புதிய சரித்திரம் படைத்தது, இந்தியா 3–வது நாளிலேயே பணிந்தது ஆஸ்திரேலியா
» சிரியாவில் ராக்கெட் மூலம் ரசாயன ஆயுதம் வீசியதில் 2 பேர் சாவு ராணுவம் மீது எதிர்க்கட்சிகள் புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum