அவுஸ்திரேலிய ஓபனில் காயமடைந்த செரினா! (pics,vid)
Page 1 of 1
அவுஸ்திரேலிய ஓபனில் காயமடைந்த செரினா! (pics,vid)
13
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் செரினா வில்லியம்ஸ், முதல் சுற்றில் ருமேனியாவின் எடினா காலோவிட்ஸ் என்பவருடன் மோதினார்.
ஆக்ரோஷமாக ஆடிய செரினா எடினாவை ஒரு புள்ளிகூட எடுக்க விடாமல் திணறடித்தார்.
அப்போது வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின்பு வலியுடன் தொடர்ந்து ஆடிய அவர் 6-0, 6-0 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
அவரது காலில் வலி மற்றும் வீக்கம் இருப்பதால் எக்ஸ்ரே எடுக்கப்பட உள்ளது. ஆனாலும் அடுத்த சுற்றில் தன்னால் சிறப்பாக ஆட முடியும் என்ற நம்பிக்கையில் செரினா இருக்கிறார்.
அச்சுறுத்தும் அளவுக்கு ஏதாவது காயம் இருந்தால் போட்டியில் பங்கேற்காமல் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதேசமயம் நான் நன்றாக இருப்பதாகவே உணர்கிறேன் என்று செரினா கூறினார்.
முன்னதாக நடந்த ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் உலக தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, நெதர்லாந்தின் ராபின் ஹாசை 6-3, 6-1, 6-3, என்ற செட்கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இறகுப் பந்தாட்டம்: யுகாண்டா ஓபனில் இலங்கையின் டினுகா சாம்பியன்
» 2012-ல் அசத்திய இலங்கை வீரர்கள்! Pics
» அவுஸ்திரேலிய அணியின் புதிய கேப்டன் கிளார்க்?
» 2வது இறுதிப் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வசமே துடுப்பு
» டைட்டானிக் நாயகிக்கு 3வது முறையாக திருமணம்! Pics
» 2012-ல் அசத்திய இலங்கை வீரர்கள்! Pics
» அவுஸ்திரேலிய அணியின் புதிய கேப்டன் கிளார்க்?
» 2வது இறுதிப் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வசமே துடுப்பு
» டைட்டானிக் நாயகிக்கு 3வது முறையாக திருமணம்! Pics
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum