தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸாட்டே மஷ்ரூம்

Go down

ஸாட்டே மஷ்ரூம்  Empty ஸாட்டே மஷ்ரூம்

Post  oviya Sat Mar 16, 2013 8:15 pm

தேவையான பொருள்கள்:

காளான் = கால் கிலோ
வெங்காயம் = 50 கிராம்
மிளகாய் பொடி = அரை ஸ்பூன்
தனியா பொடி = அரை ஸ்பூன்
மஞ்சள் பொடி = கால் ஸ்பூன்
தேங்காய் = கால் ஸ்பூன்
கடுகு = கால் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
எண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

காளானை தேவையான அளவில் நறுக்கி அலம்பி லேசாக பிழிந்துக் கொள்ளவும். இதை சிறிது எலுமிச்சைச் சாறுகலந்த நீரில் அலசுவது வழக்கம். அதே போல் சிலர் காளானின் குடை பகுதிக்கு கீழ் இருக்கும் சீப்பு போன்ற பாகத்தை லேசாக சுரண்டி அகற்றி விடுவது வழக்கம். இதை போல சுத்தம் செய்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நறுக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். இந்த தேங்காயோடு பாதி வெங்காயத்தை வைத்து அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் மிளகாய் பொடி, தனியா பொடி சேர்த்து கிளறவும். அரைத்த தேங்காயை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு வதக்கவும். தண்ணீர் வற்றி மசாலா கொதித்து நன்கு வற்றியதும் உப்பு சேர்த்துக் கிளறவும்.
மசாலா சிவந்து வரும் போது நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து பின் மெதுவாக கிளறி விடவும். 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கி கொத்தமல்லி சேர்த்து இறக்கி வைக்கவும்.

சுவையான ஸாட்டே மஷ்ரூம் தயார். இதை சூடாக ரைஸ், சப்பாத்தி, பரோட்டா, நூடுல்ஸ் போன்றவற்றோடு பரிமாறலாம்.

மருத்துவ குணங்கள்:

காளானில் கொழுப்பு சத்து மிகவும் குறைவு. மேலும் கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நீர் மற்றும் ஃபைபர் காணப்படுகிறது.
நீரிழிவு உடையவர்கள் காளானை எடுத்து கொள்வதால் தொற்று நோய்கள், வீக்கம் போன்றவை குறைகிறது.
காளானில் இரும்பு, தாமிரம், பொட்டாசியம், செலினியம் இருப்பதால் இரத்த அழுத்தம் குறையும். இரத்த சோகை வராது. நகங்கள், பற்கள், எலும்புகள் வளர்ச்சிக்கு உதவுகிறது.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum