30 வருடத்திற்கு பிறகு மோகன்லாலை சந்தித்த ஆன்மீக குரு
Page 1 of 1

பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் வீடு கொச்சியில் உள்ளது. இவரது வீட்டுக்கு காவி உடை அணிந்த ஒரு சாமியார் வந்தார். அவர் வீட்டு முன்பு நின்று கொண்டு அங்கிருந்தவர்களிடம் இது மோகன்லால் வீடுதானே என்று விசாரித்தார்.
மோகன்லால் வீட்டுக்கு சாமியார் வந்த தகவல் பரவியதால் அங்கு மக்கள் கூடினார்கள். இதற்கிடையே சாமியார் வந்த தகவல் மோகன்லாலுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் வெளியே வந்து பார்த்தார்.
அந்த சாமியாரை பார்த்ததும் இன்ப அதிர்ச்சி அடைந்த மோகன்லால் அவரை பணிவுடன் வணங்கி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். மோகன்லாலை சாமியார் சந்தித்ததும் அவரை மோகன்லால் பணிவுடன் அழைத்துச் சென்றதும் அங்கு கூடியிருந்தவர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதன் பிறகுதான் அவர் மோகன்லாலின் ஆன்மீக குரு என்ற தகவல் வெளியானது. அந்த சாமியாரின் பெயர் சாத்துக்குட்டி சுவாமிகள். கொல்லூர் மூகாம்பிகை கோவிலை சேர்ந்தவர். மோகன்லாலை சிறு வயதில் இருந்தே அந்த சாமியாருக்கு தெரியும்.
மோகன்லாலை சங்கரபீடம், கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் உள்ள சித்திரை மூலை போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று உள்ளார். அவரிடம் மோகன்லால் மிகுந்த பக்தியும் மரியாதையும் வைத்துள்ளார். சுமார் 30 வருடங்களுக்கு பிறகு இந்த சாமியார் எந்த முன் அறிவிப்பும் இன்றி மோகன்லாலை தேடி அவரது வீட்டுக்கு வந்துள்ளார்.
மோகன்லாலை நீண்ட வருடங்களுக்கு பிறகு சந்தித்தது பற்றி சாத்துக்குட்டி சுவாமிகள் கூறும்போது, கொச்சிக்கு பக்தி யாத்திரை வந்ததாகவும், அப்போது மோகன்லாலை சந்திக்க விரும்பியதால் அவரை தேடி வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் 30 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் மோகன்லாலை பார்ப்பதாகவும் அவரை அடையாளம் காணுவதற்கு சற்று சிரமம் ஏற்பட்டதாகவும் கூறினார். சாத்துக்குட்டி சுவாமிகளை சந்தித்ததில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று மோகன்லால் குறிப்பிட்டார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 30 வருடத்திற்கு பிறகு மோகன்லாலை சந்தித்த ஆன்மீக குரு
» மோகன்லாலை இயக்குகிறார் அருண் வைத்யநாதன்
» விஜய்யை சந்தித்த அசின்
» குருகுரு குரு குரு குரு
» ஆச்சியை சந்தித்த அனுஷ்கா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum