தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

42 வயது ஆசாமியுடன் கட்டாய திருமணம்: தாலியை அகற்றிய சிறுமி: பொலீசார் அசமந்தம்

Go down

42 வயது ஆசாமியுடன் கட்டாய திருமணம்: தாலியை அகற்றிய சிறுமி: பொலீசார் அசமந்தம் Empty 42 வயது ஆசாமியுடன் கட்டாய திருமணம்: தாலியை அகற்றிய சிறுமி: பொலீசார் அசமந்தம்

Post  meenu Sat Mar 16, 2013 1:31 pm

42 வயது ஆசாமியுடன் கட்டாய திருமணம்: தாலியை அகற்றிய சிறுமி: பொலீசார் அசமந்தம் Download

வேலூர் மாவட்டம் ரத்தினகிரி அருகே உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் 14
வயது சிறுமி. பெற்றோரை இழந்த இந்த சிறுமி, 8ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
குழந்தைப் பருவத்தில் இருந்தே இந்த சிறுமி, அதே பகுதியில் உள்ள பெரியப்பா
வீட்டில் வசித்து வருகிறாள்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் அந்த சிறுமி, திருமணக்கோலத்தில் தனது
உறவினர்களுடன் கன்னிகாபுரத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலுக்கு
விளக்கேற்ற வந்தாள்.

அவரது அருகில் இருந்த புதுமாப்பிள்ளை ‘மேக்கப்’போட்டு மூடி மறைத்தும் முதுமைத் தோற்றத்துடன் காணப்பட்டார்.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், சந்தேகம் அடைந்து அந்த
சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது அந்த சிறுமி, ‘என்னை கட்டாயப்படுத்தி,
42 வயது ஆசாமிக்கு 2ம் திருமணம் செய்து வைத்துவிட்டனர்.

இவர்களிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள்’ என்று கூறி கதறி அழுதாள்.
மேலும் தனது கழுத்தில் கிடந்த தாலியை கழற்றி, கோயிலில் வைத்தாள்.
பொதுமக்கள் மாப்பிள்ளை மற்றும் அவர்களுடன் வந்திருந்த உறவினர்களிடம்
விசாரணை நடத்தினர்.

அப்போது மாப்பி ள்ளை பெங்களூர் நேதாஜி நகரைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி
பழனி (42) என்பதும், அந்த சிறுமிக்கு உறவு முறையைச் சேர்ந்தவர் என்பதும்
தெரியவந்தது.

மேலும் ஏற்கனவே திருமணமான பழனி, தனது முதல் மனைவியை பிரிந்து
வாழ்கிறார். கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்டதை ஒப்புக்கொண்ட பழனி,
‘பொதுமக்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக எழுதிக்கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த ரத்தினகிரி சப் இன்ஸ்பெக்டர் மனோகரன்,
ராணிப்பேட்டை மகளிர் போலீசாரிடம் விஷயத்தை கூறி, மேல் நடவடிக்கைக்கு
ஏற்பாடு செய்வதாக கூறிச்சென்றனர். பெரியப்பாவுடன் அந்த சிறுமி சென்றார்.
மாப்பிள்ளை வீட்டாரும் அங்கிருந்து கலைந்துசென்றனர். பல மணி நேரம் ஆகியும்
நடவடிக்கை எடுக்க போலீ சார் யாரும் வரவில்லை.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 14 வயது சிறுமி கர்ப்பம்! சந்தேகத்தில் 42 வயது குடும்பஸ்தர் ஒருவர் கைது!
» மூன்றரை வயது சிறுமி மீது 10 வயது சிறுவன் துஸ்பிரயோகம்!
» 55 வயது கிழவனின் பாலியல் இச்சைக்கு நாலரை வயது சிறுமி!
» ஏறாவூரில் 71 வயது முதியவரால் 11 வயது சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாள்!
» ஏறாவூரில் 71 வயது முதியவரால் 11 வயது சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum