சமுதாயத்தில் நல்ல பெயருடன் வாழ்கிறாராம் ரஞ்சிதா: அவரே சொல்கிறார்!
Page 1 of 1
சமுதாயத்தில் நல்ல பெயருடன் வாழ்கிறாராம் ரஞ்சிதா: அவரே சொல்கிறார்!
நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக பதவி ஏற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜெயேந்திரர், “நித்யானந்தாவுக்கு ஆதீனம் பட்டம் வழங்கியதை ஏற்க முடியாது. நடிகை ரஞ்சிதா எப்போதும் அவருடன் இருக்கிறார்,” என்று கூறி இருந்தார்.
நித்யானந்தாவுடன் என்னை தேவையில்லாமல் தொடர்புபடுத்துவது ஏன்? என கொந்தளித்த ரஞ்சிதா, ஜெயேந்திரருக்கு எதிராக இன்று மானநட்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
அப்போது பேசிய ரஞ்சிதா…
உலகம் முழுவதும் எனக்கு ரசிகர்கள் உள்ளனர். ராகேஷ் ராமச்சந்திராமேனன் என்ற ராணுவ வீரரை நான் திருமணம் செய்துள்ளேன். சமுதாயத்தில் நான் நல்ல பெயருடன் வாழ்ந்து வருகிறேன். பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளேன். நித்யானந்தா சுவாமிகளின் ஆசிரமத்துக்கு சென்று வரும் நான் அவரது சீடராகவும் உள்ளேன்.
இந்த பேட்டி எனக்கும் நித்யானந்தாவுக்கும் உள்ள குரு- சீடர் உறவை கொச்சைப்படுத்துவது போல உள்ளது. ஜெயேந்திரர் பேட்டியை பார்த்த என் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சகோதரி ஜோதி ஆகியோர் என்னை போனில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.
ஜெயேந்திரர் மீது சங்கரராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கு ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அவர் என்னைப்பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.
என்றார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அண்ணனும் அவரே! தங்கையும் அவரே! – இயக்குனரின் புதிய அரிதாரம்
» படித்துறை நல்ல படம் - சொல்கிறார் ஆர்யா
» ஏன் பிடிவாதமாக உங்கள் பெயருடன் அய்யரை ஒட்டிக் கொண்டே இருக்கிறீர்கள்? – ஜனனியிடம் ஒரு கேள்வி
» சமுதாயத்தில் பொதுவுடமைக் கோட்பாடு
» சமுதாயத்தில் பொதுவுடைமைக் கோட்பாடு
» படித்துறை நல்ல படம் - சொல்கிறார் ஆர்யா
» ஏன் பிடிவாதமாக உங்கள் பெயருடன் அய்யரை ஒட்டிக் கொண்டே இருக்கிறீர்கள்? – ஜனனியிடம் ஒரு கேள்வி
» சமுதாயத்தில் பொதுவுடமைக் கோட்பாடு
» சமுதாயத்தில் பொதுவுடைமைக் கோட்பாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum