ஏழை குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மனநிறைவு அடைகிறேன்: ஹன்சிகா
Page 1 of 1

தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாக உள்ளார் ஹன்சிகா மொத்வானி. தற்போது இவரிடம் ஏழு படங்கள் கைவசம் உள்ளன. இந்நிலையில், ஹன்சிகா அளித்த பேட்டி வருமாறு:-
என் வாழ்க்கையில் உந்துதலாக இருக்கும் பெண்மணி எனது தாயார். எனக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டு உள்ளார். என்னுடைய பலம் அவர்தான்.
இன்றைய சூழ்நிலையில் பெண்களின் பாதுகாப்பு என்பது அவர்கள் கையில்தான் இருக்கிறது. எந்த ஒரு சூழலையும் துணிச்சலுடனும் புத்திசாலித்தனமாகவும் கையாள்வது அவசியம்.
அலுவலகங்களில் வேலை தாமதமாக முடியும் நிலையில், பெண்கள் தங்கள் பெற்றோருக்கு அதை உடனே தெரிவிப்பது நல்லது. ஏழை குழந்தைகளை நான் தத்தெடுத்து வளர்க்கிறேன். இவ்வாறான சேவைகளை என் தாயார் செய்து வருகிறார். ஒரு நாள் நீயும் ஏன் இதை செய்யக்கூடாது என கேட்டார். இந்த கேள்வி என்னை யோசிக்க வைத்தது. அதன்பிறகு நான் குழந்தைகளை தத்தெடுத்தேன். அவர்களின் நல்வாழ்வுக்கு தேவையான விஷயங்களை செய்து வருகிறேன். எனக்கு இது மனநிறைவை தருகிறது.
கதாநாயகிகளை கையாள்வதிலும் நடத்துவதிலும் தமிழ் திரை துறைக்கும் தெலுங்கு பட உலகுக்கும் வேறுபாடு இல்லை. மொழி மாறுமே தவிர படப்பிடிப்பு என்ற உணர்வும் உபசரிப்பும் ஒன்றுதான்.
சாப்பிடுவதை குறைத்து கொண்டதால் உடல் எடையும் குறைந்து விட்டது. தினமும் அதிக நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டதும் எடை குறைவுக்கு காரணமாக அமைந்தது. நான் நடிகையாக இருப்பதில் சந்தோஷப்படுகிறேன். முதல் இடத்தை பிடிப்பது பற்றி சிந்திக்கவில்லை. நம்பர் விளையாட்டில் நம்பிக்கை இல்லை. சிறந்த நடிகை பண்பான நடிகை என்ற பெயரே நிரந்தரமானது.
கதாநாயகிகளின் சினிமா ஆயுட்காலம் குறைவு என்பதை ஏற்க மாட்டேன். ரேவதி, குஷ்பு, ஸ்ரீதேவி போன்றோர் இன்னும் சினிமாவில் நிலைத்து உள்ளனர்.
இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஏழை குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மனநிறைவு அடைகிறேன்: ஹன்சிகா
» மனநிறைவு பெற வழி!!!
» என் மகள் நடிகையானதில் மகிழ்ச்சி அடைகிறேன்: அர்ஜுன்
» ரசிகர்களின் அன்பில் பெருமிதம் அடைகிறேன்: ரஜினிகாந்த்
» குழந்தைகளை கொண்டாடுவோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum