வெஜிடபிள் சீஸ் பர்கர்
Page 1 of 1
வெஜிடபிள் சீஸ் பர்கர்
தேவையானவை:
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப், வேக வைத்த காய்கறி கலவை - அரை கப், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன், மைதா (அ) கார்ன்ஃப்ளார் - 2 டேபிள்ஸ்பூன், துருவிய சீஸ் - கால் கப், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க.
பர்கர் செய்ய: பன் - 1 (அ) பிரெட் - 2 ஸ்லைஸ், வெண்ணெய் - சிறிதளவு, துருவிய கேரட் - சிறிதளவு, மிகவும் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - சிறிதளவு, தக்காளி சாஸ் - சிறிதளவு.
செய்முறை: எண்ணெய் நீங்கலாக கட்லெட்டுக்கு கொடுத்துள்ள பொருட்களை பிசைந்து கொள்ளவும். அதை சிறு கட்லெட்டுகளாக செய்து, எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும். பன்-ஐ குறுக்கு வாக்கில் இரண்டாக வெட்டி, இரண்டு துண்டிலும் வெண்ணெயைத் தடவவும். இதனை தோசைக்கல்லில் போட்டு லேசாக சூடாக்கிக் கொள்ளவும். ஒரு துண்டின் மேல் துருவிய கேரட், முட்டைகோஸை தூவவும். அதன் மேல் ஒரு கட்லெட்டை வைத்து, சிறிதளவு சாஸ் ஊற்றி, வெட்டி வைத்திருக்கும் மற்றொரு துண்டு பன்னால் மூடி பரிமாறவும்.
வெஜிடபிள் சீஸ் பர்கர்: கடைகளில் மட்டுமே சாப்பிட்டுப் பழகிய பர்கரை, வீட்டிலேயே செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். பால் சாப்பிடாத குழந்தைகளுக்கு இதில் பனீரை சேர்த்து செய்து கொடுக்கலாம். துருவிய காய்கறிகளை பச்சையாக பயன்படுத்துவதால் அவற்றில் உள்ள அத்தனை சத்துக்களும் நேரடியாகக் கிடைத்து விடும.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெஜிடபிள் சீஸ் பர்கர்
» வெஜிடபிள் சிஸ் பர்கர்
» சமையல்:வெஜிடபிள் சிஸ் பர்கர்
» பட்டாணி சீஸ் பன்
» சில்லி - சீஸ் தோசை
» வெஜிடபிள் சிஸ் பர்கர்
» சமையல்:வெஜிடபிள் சிஸ் பர்கர்
» பட்டாணி சீஸ் பன்
» சில்லி - சீஸ் தோசை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum