தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காய்கறி இட்லி

Go down

காய்கறி இட்லி                          Empty காய்கறி இட்லி

Post  ishwarya Thu Mar 14, 2013 5:00 pm

தேவையானப்பொருட்கள்:

பாசிப் பருப்பு - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
கோதுமை ரவை - 1 கப்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
கேரட் – 1
வேகவைத்த பச்சை பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
தயிர் - 2 ஸ்பூன்

செய்முறை....

• பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் 5 மணி நேரம் ஊறவைத்து, பருப்பு ஊறியவுடன், அத்துடன் பச்சைமிளகாய், இஞ்சி, பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும்.

• காரட்டை துருவிக்கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவுடன் ரவை, துருவிய காரட், வேகவைத்த பட்டாணி ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு, உப்பையும் சேர்த்துக் கலக்கவும்.

• இதோடு சிறிது தயிர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.

• இட்லி தட்டில் சிறிது நெய்யைத் தடவி, அதில் இட்லி மாவை விட்டு, வேக விடவும்.

• குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான இட்லி தயார்.

• இந்த மாவில் காளான் மற்றும் முந்திரியையும் சேர்க்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum