தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாற்றுத்திறனாளியை மணந்தார் காதல் சரவணன்

Go down

மாற்றுத்திறனாளியை மணந்தார் காதல் சரவணன்  Empty மாற்றுத்திறனாளியை மணந்தார் காதல் சரவணன்

Post  ishwarya Thu Mar 14, 2013 2:05 pm

சென்னை : ‘காதல்’, ‘வழக்கு எண் 18/9’, ‘சிங்கம்’, ‘மருதமலை’ உட்பட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்தவர், ‘காதல்’ சரவணன். இவருக்கும், திருச்சியைச் சேர்ந்த மலர் என்பவருக்கும் சென்னை கே.கே.நகர் அம்மன் கோயிலில், திருமணம் நடந்தது. இருவீட்டு உறவினர்கள் கலந்துகொண்டனர். இதுபற்றி ‘காதல்’ சரவணன் கூறும்போது, ‘‘திருச்சியில் ஆசிரியையாகப் பணியாற்றியவர் மலர். அவரைப் பெண் பார்க்க நண்பர் ஒருவர் சென்றபோது,

துணையாகச் சென்றிருந்தேன். சில காரணங்களால் அவர்கள் திருமணம் நடக்கவில்லை. மலருக்கு கால்கள் சரியாக ஒத்துழைக்காது. அவரை நான் திருமணம் செய்ய நினைத்தேன். அவரும் சம்மதித்தார். இது கலப்புத் திருமணம். இரக்கப்பட்டு அவரைத் திருமணம் செய்யவில்லை. மனிதநேயத்தை முன்வைத்து குடும்ப வாழ்க்கையை தேர்வு செய்தேன். தற்போது ‘பூலோகம்’, ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘காளையரும் கன்னியரும்’ உட்பட பல படங்களில் நடித்து வருகிறேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum