தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முப்பெரும் தேவியர்

Go down

முப்பெரும் தேவியர்                                         Empty முப்பெரும் தேவியர்

Post  ishwarya Wed Mar 13, 2013 5:31 pm

இந்த மூவரையும் வரவேற்காமல் வேறு யாருக்கு வெல்கம் சொல்ல முடியும்? ஆண்களும் ஆண்கள் சார்ந்த துறைகளும் என்று இருக்கும் திரைத்துறையில் இந்த மூவரின் பங்களிப்பும், வளர்ச்சியும் சாதாரணமானதுமல்ல, லேசுப்பட்ட காரியமும் அல்ல. அதற்காக ஆணாதிக்கத்தை வேர் அறுப்பவர்கள் என்றும் இவர்களை அடையாளப்படுத்திவிட முடியாது. அப்படியொரு சம்பவம் இவர்களால் மட்டுமல்ல எவராலும் நிகழ வாய்ப்பில்லை. காரணம், சமூக மாற்றம் ஏற்படாமல் எந்த மாற்றமும் சாத்தியமில்லை.

ஸோ, நிலவும் சூழலை எப்படி தங்களுக்கு சாதகமாக இந்த முப்பெரும் தேவியர் பயன்படுத்தப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
அனுஷ்காவுக்கு அறிமுகம் தேவையில்லை. யோகா டீச்சர். கவர்ச்சியான உடல்வாகு. மரத்தை சுற்றி டூயட் பாடுவதிலும், கதாநாயகனுக்காக உருகுவதிலும் கை தேர்ந்தவர். ஆனால், இது மட்டும் போதும் என்று நினைக்காததுதான் இவரது ப்ளஸ். கமர்ஷியல் சினிமாவின் ஃபார்முலாவுக்கு உட்பட்டு தன் திறமையை நிரூபிக்க போராடுபவர். ‘அருந்ததி’ இதற்கு நல்ல உதாரணம். செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் ‘இரண்டாம் உலகம்’ மற்றும் ‘ஒக்கடு’ (தமிழ் ‘கில்லி’யின் ஒரிஜினல்) குணசேகர் டைரக்ஷனில் கதையின் நாயகியாக இவர் நடிக்கவிருக்கும் ‘ருத்ரம்மாதேவி’ ஆகிய இரண்டும் இவரது திறமையை பன்மடங்கு வெளிப்படுத்தும் என்கிறார்கள்.

நடு தேவியாக மட்டுமல்ல, முக்கியமான சக்தியாகவும் திகழ்பவர், வித்யா பாலன். சந்திக்காத அவமானங்களுமில்லை. புறக்கணிக்காத இயக்குநர்களுமில்லை. குள்ளமான உருவம். முகத்தில் சுடர்விடும் கம்பீரம். ஆரம்பத்தில் தடையாக இருந்த இவற்றையே தன் பலமாக கருதியவர், கருத வைத்தவர். சென்ற ஆண்டு இறுதியில் வித்யா பாலனுக்கு திருமணமாகிவிட்டது. என்றாலும் கதாநாயகியை மையமாக வைத்து படம் எடுக்க நினைக்கும் அனைத்து படைப்பாளிகளும் இவரையே முதலில் அணுகுகிறார்கள் என்பதுதான் ஹைலைட். ‘Ghanchakkar, Shaddi ke Side Effects’ ஆகிய இரண்டு படங்களும் இந்தாண்டு இவர் பெயரை சொல்லப் போகும் பிள்ளைகள்.

இந்தப் பட்டியலில் த்ரிஷாவை இணைத்ததற்கான ஒரே காரணம், பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கதாநாயகியாக அவர் நடித்து வருவதுதான். அதுவும் ஒரு பாடலுக்கு ஸ்பெஷல் டான்ஸ்... அது இது என்று திசைமாறி பறக்காதது மிகப்பெரிய ஆறுதல். ஒப்பந்தமாகியிருக்கும் ‘ரம்’ (ரம்பா ஊர்வசி மேனகா), அடுத்தக்கட்ட நகர்வுக்கு உதவக் கூடும். ஏனெனில் இந்தப் படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம் என மும்மொழிகளில் தயாரிப்பவர் எம்.எஸ்.ராஜு. ‘அம்மன்’, ‘ஒக்கடு’, ‘வர்ஷம்’ என பிரம்மாண்டமான படங்களுக்கு பின்னால் இருக்கும் சூத்திரதாரி. ஒருவகையில் த்ரிஷாவை தெலுங்கு திரையுலகில் அறிமுகப்படுத்தியவரும் எம்.எஸ்.ராஜுதான். எனவே, த்ரிஷாவின் பரிணாம வளர்ச்சிக்கு ‘ரம்’ விலாசமாக அமையும் என நம்பலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum