ஹெலிகாப்டர் ஊழல்: மாஜி ராணுவ தளபதி தியாகி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு : 12 இடங்களில் ரெய்டு
Page 1 of 1

புதுடில்லி: ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் ராணுவ தளபதி தியாகி மீது சி.பி.ஐ., பல்வேறு பிரிவுகளில் வழக்கப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக அவரது இல்லம், அலுவலகங்களில் ரெய்டும் நடந்து வருகிறது. வி.வி.ஐ.பி.,க்கள் பயணம் செய்ய ஹெலிகாப்டர் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக தகவல் வெளியானது. இது தொடர்பாக இத்தாலியில் பின் மெக்கானிக்கா நிறுவனத்தின் தலைவரும், அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்தின் தலைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலில், ரூ. 3600 கோடி ஹெலிகாப்டர் பேரத்தில் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ. 360 கோடி லஞ்சம் கொடுத்ததாக பகீர் தகவலை வெளியிட்டனர். இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சி.பி.ஐ. விசாரணை
இது குறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ., குழு இத்தாலி சென்று சில ஆவணங்களை திரட்டியது. இந்த வழக்கில் விமானப்படை முன்னாள் தளபதி தியாகிக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகின. இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ., முடிவு செய்தது. இது தொடர்பாக முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி., தியாகி மற்றும் அவரது உறவினர்களிடம் சி.பி.ஐ., தீவிர விசாரணை நடத்தியது.
இதனையடுத்து தியாகியும், அவரது உறவினர்கள் ஜூலி மற்றும் டோக்சா தியாகியும் சி.பி.ஐ., தலைமையகத்தில் கடந்த 6-ம் தேதியன்று ஆஜரானார்கள். அவர்களிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள், முன்னாள் ராணுவ தளபதி எஸ்.பி.தியாகி, மற்றும் 11 பேர் மீது மோசடி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கப்பதிவு செய்துள்ளனர். மேலும் டில்லி, அரியானா ஆகிய மாநிலங்களில் அவரது அலுவலகம் மற்றும் வீடு என 12 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சீன ராணுவம் ஊடுருவல்: மன்மோகன் சிங்குடன் ராணுவ தளபதி சந்திப்பு
» ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல்: முக்கிய ஆவணங்கள் வந்தன

» இந்தியாவுக்கு ஹெலிகாப்டர் விற்றதில் ஊழல் - அதிகாரி கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum