ஐதராபாத் குண்டு வெடிப்பு: ராமேசுவரம் கோவிலுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு
Page 1 of 1
ஐதராபாத் குண்டு வெடிப்பு: ராமேசுவரம் கோவிலுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு
ஐதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உத்தரவின்பேரில் ராமேசுவரம் கோவிலுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதன்படி கோவிலில் கிழக்குவாசல், மேற்கு வாசல் ஆகியவற்றில் மெட்டல்டிடெக்டர் கருவி பொருத்தப்பட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இதேபோல தெற்கு மற்றும் வடக்கு கோபுரவாசல்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுதவிர கோவிலின் 3-ம் பிரகாரங்களில் கடந்த இரு நாட்களாக மோப்ப நாய் ஜான்சி உதவியுடன் வெடி குண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள 16 கேமிராக்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவிலின் அருகே எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் அக்னி தீர்த்த கடற்கரை, கிழக்கு வாசல் போன்ற பகுதிகளில் செயல்படாமல் கிடக்கும் கண்காணிப்பு கேமிராக்களையும் சரி செய்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» துப்பாக்கி குண்டு உதட்டில் உரசி நீது சந்திரா காயம்!
» 1993 மும்பை குண்டு வெடிப்பு: நான் சரணடைய போகிறேன் - சஞ்சய் தத் பேட்டி
» பாகிஸ்தானுக்கு வந்துவிட்டால் ஷாருக்கானுக்கு உரிய மரியாதை கிடைக்கும்: மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி அழைப்பு
» ரஜினி வருகை… பலத்த போலீஸ் பாதுகாப்பு… ரசிகர்களுக்கு லதா வேண்டுகோள்!
» ராமேசுவரம் ஸ்ரீ ராமநாத சுவாமி திருக்கோயில் தேரோட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum