புற்றுநோயை(cancer) தடுக்கும் உணவுகள்!
Page 1 of 1
புற்றுநோயை(cancer) தடுக்கும் உணவுகள்!
11
vegitablesஇறப்பை ஏற்படுத்தும் நோய்களில் cancer ம் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த நோய்க்கு நிறைய மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் நிறைய மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டு இறப்பிற்கு ஆளாகின்றனர்.
ஆனால் உண்மையில் இந்த நோயை உணவுகளாலேயே குணப்படுத்திவிட முடியும். குறிப்பாக ஆரோக்கிய உணவுகளான பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களால் சரிசெய்துவிடலாம்.
சிவப்பு மற்றும் நீல நிற பழங்கள்
அந்தோசியனின்கள் என்பவை வயதான தோற்றம், இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும் ஒரு பொருள்.
இத்தகைய பொருள் சிவப்பு மற்றும் நீல நிற பழங்களில் அதிகம் இருக்கும். எனவே அத்தகைய பழங்களான ஸ்ட்ராபெர்ரி மற்றும் செர்ரி பழங்களை அதிகம் சாப்பிடுவது நல்லது.
தக்காளி
தக்காளியில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் அவை புற்றுநோயால் செல்லுலார் பாதிப்படைவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி இதில் புற்றுநோயை தடுக்கும் முக்கிய பொருளான லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.
மஞ்சள்
மஞ்சளில் சிறந்த மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. அதிலும் இது குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
சிட்ரஸ் பழ ஜூஸ்
ஜூஸ் என்றதும் பாக்கெட் அல்லது இதர குளிர்பானங்களை நினைக்க வேண்டாம். சிட்ரஸ் பழங்களால் செய்யப்பட்ட ஜூஸில் தான் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், இவை புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும்.
காய்கறிகள்
காய்கறிகளில் காலிஃப்ளவர், ப்ராக்கோலி, முட்டைகோஸ் போன்றவற்றில் இன்டோல்-3-கார்பினோல் அதிகம் இருப்பதால், அவை மார்பக புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழித்துவிடும்.
பசலைக் கீரை
பசலைக் கீரையில் கரோட்டினாய்டு அதிகம் இருப்பதால் அது முழு உடலுக்கும் நன்மையை தரும். அதேசமயம் இந்த கீரையில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் மருத்துவ குணமும் நிறைந்துள்ளது.
பூண்டு
பூண்டு புற்றுநோய் உடலை தாக்காமல் தடுக்க உதவும் ஒரு சிறந்த உணவுப் பொருள். எப்படியெனில் இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், டியூமஙர் செல்களை அழிப்பதோடு, புற்றுநோயை எதிர்த்துப் போராடி உடலை பாதுகாக்கவும் சிறந்தது.
காளான்
காளானில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்து, புற்றுநோயை வராமல் தடுக்கும் பொருள் அதிகம் உள்ளது. எனவே இதனை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், புற்றுநோயை தடுக்கலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நெஞ்செரிச்சலைத் தடுக்கும் 10 உணவுகள்!!!
» புற்றுநோயை தடுக்கும் 10 ஆரோக்கிய உணவுகள்!!!
» கூந்தல் உதிர்வை தடுக்கும் உணவுகள்...
» ரத்த சோகையை தடுக்கும் உணவுகள்
» தாய்மையை தடுக்கும் உணவுகள்! கவனம் தேவை!!
» புற்றுநோயை தடுக்கும் 10 ஆரோக்கிய உணவுகள்!!!
» கூந்தல் உதிர்வை தடுக்கும் உணவுகள்...
» ரத்த சோகையை தடுக்கும் உணவுகள்
» தாய்மையை தடுக்கும் உணவுகள்! கவனம் தேவை!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum