வீட்டிலிருந்தே இலகுவில் தயாரிக்க மில்க் ரொபி…
Page 1 of 1
வீட்டிலிருந்தே இலகுவில் தயாரிக்க மில்க் ரொபி…
முன்பெல்லாம் பெரியளவில் இனிப்புகள் வாங்கித் தரமாட்டார்கள். ஏதாவது ருசிக்குச் சாப்பிட வேண்டும் அதுவும் இனிப்பாக இருக்க வேண்டும் என்றால் மில்க் ரொபி தான் ஆபத்தாண்டவர். இதை வீட்டில் செய்யும் போது மகள் சமையல் பழகுகிறாள் என்ற நினைப்பில் அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். அத்தோடு இதை எளிதாகச் செய்து கொள்ளவும் முடியும். சரி ஒரு தடவை செய்துதான் பார்ப்போமே.
தேவையான பொருட்கள்
ஒரு ரின் மில்க்
ஒன்றரை பேணி சீனி
அரை பேணி தண்ணீர்
வனிலா
தேவையான அளவு கஜூ
செய்முறை
சீனியையும் தண்ணீரையும் சேர்த்துக் காய்ச்சிக் கொள்ளுங்கள். இப்பொழுது ரின் மில்க்கையும் சேர்த்து கிளறிக் கொண்டிருங்கள். என்ன பதார்த்தம் இறுகி வருகின்றதா? அப்படியானால் வனிலா, கஜூ சேர்த்து நன்றாகக் கலந்து விடுங்கள். இதனை வெண்ணை தடவிய தட்டில் போட்டு நன்றாகப் பரவி விடுங்கள். ஆறிய பின்னர் உங்கள் விருப்பமான வடிவத்தில் வெட்டிக் கொள்ளுங்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வீட்டிலிருந்தே இலகுவில் தயாரிக்க மில்க் ரொபி…
» மில்க் ரொபி
» வீட்டிலிருந்தே பாதங்களின் அழகை பேணலாம் ...
» செறிவூட்டப்பட்ட தொழு உரம் தயாரிக்க மானியம்
» மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
» மில்க் ரொபி
» வீட்டிலிருந்தே பாதங்களின் அழகை பேணலாம் ...
» செறிவூட்டப்பட்ட தொழு உரம் தயாரிக்க மானியம்
» மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum