தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விவாத மேடை: 13-2-2013 இதழில் விவாத மேடை

Go down

விவாத மேடை: 13-2-2013 இதழில் விவாத மேடை Empty விவாத மேடை: 13-2-2013 இதழில் விவாத மேடை

Post  meenu Tue Mar 12, 2013 1:10 pm

மாணவரிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவனத்துக்குரியதுதான். செல்போன் தவறாகப் பயன்படுவதும், அநாவசிய அரட்டைப் பேச்சில் காலவிரயமும், பொருள்செலவும் தவிர்க்கப்பட வேண்டியதும் அனைவருக்குமே பொது நெறி. ஆனால், தற்கால செல்போன் பல் பயன்பாடு கொண்டது. கல்வி போதனா முறையில் கம்ப்யூட்டர்போல செல்போன் தவிர்க்க முடியாத சாதனமாக உருவாகும் காலம் இங்கு சமீபித்துக் கொண்டிருக்கிறது. செல்போன் பயன்பாடு குறித்த தகவல்கள் - நுட்பங்கள் எட்டாம் வகுப்பிலேயே மாணவர்க்கு வழங்கப்படலாம்.

பா. கணபதிசுந்தரராமன், திருச்சி.



அவசியம்தான்

மாணவர்கள்தான் புதிய கருவிகள் முதல் "ரோபோ' வரை கண்டுபிடிக்கிறார்கள். அவர்களுக்கு செல்போன் அவசியம் தேவைதான். ஒரு சில இடங்களில் மாணவர்கள் செல்போன்களைத் தவறாகப் பயன்படுத்துவதால் ஒட்டுமொத்தமாகத் தேவையில்லை என்று சொல்லிவிட முடியாது.

சொ.நா. ஈசுவரமூர்த்தி, திடியூர்.



ஏற்கக் கூடியதல்ல

மாணவர்கள் தவறான வழியில் போய்விடுவார்கள்; கல்வியிலே கவனம் இருக்காது என்பதற்காக செல்போன் தேவையில்லை என்பதைவிட, செல்போன் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தி, தேவைக்குப் பயன்படுத்துமாறு அறிவுரை, ஆலோசனைகளை, அன்பாய் கூறலாம். இதைத் தவிர்த்து மாணவர்களுக்கு செல்போன் தேவையில்லை என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

கோ. மொக்கையன், மதுரை.

வேலைப்பளு குறைந்தது

செல்போன்களின் வரவால் தகவல்தொடர்பு எளிதாகி வேலைப்பளு குறைந்துவிட்டது. எந்த ஒரு விஞ்ஞான சாதனத்திலும் சாதகம், பாதகம் என்று உண்டு. கேமரா, செல்போன்களால் ஆபாசப் படம் "பதிவிறக்கம்' செய்யப்பட்டு மிரட்டல்கள் உண்டாகின்றன. குறுந்தகவல் பரிமாற்றம் மிரட்டலுக்கும், வதந்திக்கும் பயன்படுகிறது. செல்போன் தேவைதான் என்றாலும், தவறாகப் பயன்படுத்துவோருக்கு தண்டனை என்ற சட்டம் இயற்றினால் நன்மை பயக்கும்.

வே. முத்துகிருஷ்ணன், தாராபுரம்.



அவசியப்பொருள்

அறிவியல் கண்டுபிடிப்பான செல்போனை, இன்டர்நெட் வசதியுடன் படிப்புக்கும், தகவல் தொடர்புக்கும் எல்லா மாணவ - மாணவியர்களும் பயன்படுத்த வேண்டும். இது ஒரு அவசியப் பொருள். அதைத் தவறான வழியில் பயன்படுத்தி, பிறர்க்குக் கேடு செய்யாமல் நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும். நவீன வசதியுள்ள செல்போன் தற்காலத்தில் தேவைதான்.

உ. அண்ணாதுரை, பரமக்குடி.



எதில் இல்லை தீமை?

இன்று செல்போனை எப்படிக் கையாள வேண்டும் என்பதை மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளும் நிலையில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் உள்ளனர். விஞ்ஞான வளர்ச்சியில் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் சில தீமைகளையும் உண்டாக்கலாம். எதில்தான் தீமை இல்லை? எனவே, மாணவர்களுக்கு செல்போன் தேவையில்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பா. ஸ்மிதா, கோட்டையூர்.



பத்தாண்டுக்கு முன்

மாணவர்களுக்கு "அவசியம்' என்று இப்போது கருதப்படும் செல்போன், பத்தாண்டுகளுக்கு முன்னால் இல்லை; ஒரு செல்போன் போதாதென்று வகைக்கு ஒரு செல்போன் என்ற ரீதியில் மாணவர்களிடையே செல்போன் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் படிப்பு ஒருபக்கம் பாதிக்கப்படுகிறது, கலாசாரச் சீரழிவை நோக்கியும் நாடு வேகமாக முன்னேறுகிறது. செல்போன்களை பள்ளி, கல்லூரிகளுக்குக் கொண்டுசெல்லக் கூடாது என்று தடை விதித்தும் பயனில்லை. பொதுப்பயன்பாட்டுக்கான தொலைபேசியகங்களுக்குக் குறைவில்லை என்பதால் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

தஞ்சை மீனாகண்ணன், கோட்டையூர்.


தடுப்பது நல்லது

மாணவர்களுக்கு செல்போன்கள் தேவையில்லை என்ற கருத்து வரவேற்கத்தக்கது. வகுப்பு நேரத்தில் செல்போன் பேசியதைக் கண்டித்த பேராசிரியருக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் அளவுக்கு மாணவர்களின் போக்கு இருக்கிறது. இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது செல்போனை தோளோடு அணைத்துக்கொண்டு பேசியபடியே சிக்னல்களைக்கூட கவனிக்காமல் அல்லது கவனிக்க முடியாமல் தங்களுடைய உயிருக்கும் மற்றவர்களுடைய உயிருக்கும் அச்சுறுத்தலாக மாணவர்கள் செல்வதும் விபத்தில் உயிரிழப்பதும் அதிகரித்தபடியே இருக்கின்றன. காதலை காமமாக்குவதில் பெரும் பங்கு செல்போனுக்கு இருக்கிறது. மாணவர்களின் உடல்நலம், உள்ள நலம், ஒழுக்கம் ஆகியவற்றைக் கருதி செல்போன்களைத் தடை செய்வது மிகமிக நல்லது.

த. நாகராஜன், சிவகாசி.

கூர்மையான கத்தி

செல்போன் என்பது கூர்மையான கத்தி; அதை ஆக்க வேலைக்கும் பயன்படுத்தலாம், அழிவு வேலைக்கும் பயன்படுத்தலாம். வானொலி, தொலைக்காட்சி, இணையதளம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் எப்படி வழிதவறுகிறோமோ அப்படித்தான் செல்போனிலும் இளைஞர்கள் - குறிப்பாக மாணவர்கள் - வழிதவறிச் செல்கின்றனர். "எல்லாவிதமான செயல்பாடுகளுக்கும்' ஏற்ற நவீன செல்போன்களால் ஆபத்து அதிகம். இவற்றை வாங்கித் தராமல் பெற்றோர்கள்தான் தவிர்க்க வேண்டும்.



ஆர். ஜலீல் உஸ்மானி, மணவாளக்குறிச்சி.



இரண்டும்கெட்டான்கள்

பொதுவாகவே அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆக்கவேலையை விட அழிவு வேலைக்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் பயிலும் இரண்டும்கெட்டான் வயதைச் சேர்ந்த மாணவர், மாணவிகள் செல்போன்கள் மூலம் தொல்லைகளையே விலை கொடுத்து வாங்குகின்றனர். "கூடா நட்புக்கு' செல்போன்கள் உதவுகின்றன. ஆபாசப் படங்கள், விரசமான குறுந்தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டு எண்ணங்கள் கட்டுக்காவல்களை மீறுகின்றன. மாணவனோ மாணவியோ பெற்றோருக்குத் தெரியாமல் காதலில் ஈடுபடவும் அதை வளர்த்துக்கொள்ளவும் பெரும்பாலும் செல்போன்களே காரணமாக இருக்கின்றன. கேமராவுடனான செல்போன்களில் மாணவிகளைக் "கண்டபடி' படம் பிடிக்கவும், பின்னர் மிரட்டி காரியம் சாதிக்கவும் பயன்படுகிறது. பயனைவிட தீமையே மிகுந்த செல்போனை நிராகரிப்பதே நல்லது.



துரை ஏ. ரமணன், துறையூர்.



தேவைப்படாத "கை'

இன்றைய மனிதர்களின் மூன்றாவது கை என்று செல்போன் அழைக்கப்பட்டாலும் மாணவர்களைப் பொருத்தவரை அது தேவையில்லாத கை தான். செல்போன் கையில் இருந்தால் படிப்பில் கவனம் செல்வதில்லை. நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவது, வரும் எஸ்.எம்.எஸ்.ûஸ உடனுக்குடன் படிப்பது, வகுப்பு நேரத்திலேயே செல்லில் மெல்லப் பேசுவது, யாருக்காவது மிஸ்டு கால் கொடுப்பது என்று கவனம் சிதறுகிறது. வகுப்பறையில் மாணவிகள் அப்படியிப்படி திரும்பும்போதோ, தன்னை மறந்த நிலையில் இருக்கும்போதோ செல்போன்களால் படம் பிடிக்கப்படுகின்றனர். தற்செயலாக சுற்றுக்கு விடுவதைப்போல விரசமான ஜோக்குகளையும் ஆபாசப் படங்களையும் இருபாலருக்கும் அனுப்பிவைத்து ரசிக்கின்றனர். வீட்டில் இருப்பவர்களின் நேரங்களை சின்னத்திரையும் மாணவர்களின் நேரங்களை செல்போன்களும் விழுங்கிவிடுகின்றன.

என். சண்முகம், திருவண்ணாமலை.



அளவுக்கு அதிகமாக

செல்போன் என்பதே அனைவருக்கும் அவசர அவசியத்துக்குத்தான்; மாணவப் பருவம் என்பது எதையும் அளவுக்கு அதிகமாகவோ, குதர்க்கமாகவோதான் பயன்படுத்தத் தூண்டும். பொழுதுபோக்குச் சாதனமாக செல்போனைப் பயன்படுத்தும் மாணவர்கள்தான் அதிகம். எனவே மாணவர்களுக்குத் தேவையில்லை என்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum