என் ஜன்னலுக்கு வெளியே
Page 1 of 1
என் ஜன்னலுக்கு வெளியே
என் ஜன்னலுக்கு வெளியே - மாலன்; பக்.152; ரூ.100; புதிய தலைமுறை பதிப்பகம், சென்னை-32; )044 - 4596 9500.
அன்றாட சமூக நிகழ்வுகள் தன் மனத்தில் ஏற்படுத்திய பாதிப்புகளை 41 கட்டுரைகளாக்கி வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் மாலன். பெரும்பாலான சம்பவங்கள் நாம் அறிந்தவையேயாயினும் அவற்றை இவர் பார்க்கும் கோணமும் அதனையொட்டி இவர் எழுப்பும் கேள்விகளும் மிகவும் ஆழமானவையும் அர்த்தமுள்ளவையுமாகும்.
ஒவ்வொரு திருநாளையும் பொருள் பொதிந்ததாக மாற்றச் சொல்லும் "வெறும் நாள்களாகும் திருநாள்கள்', பூமிக்குக் கீழே 2000 அடி ஆழத்தில் 69 நாட்கள் சிக்கிக் கொண்ட சுரங்கத் தொழிலாளர்களிடமிருந்து நாம் பயில வேண்டிய மானுடப் பண்பை சொல்லும் "சின்ன தேசம் சொன்ன பாடம்' போன்ற கட்டுரைகள் சிறப்பானவை.
பாசாங்கற்ற மொழிநடை, கறாரான சொற்சிக்கனம், அடிநாதமாயிருக்கும் அக்கறை தொனி இவையே இக்கட்டுரைகளை சிறப்பாக்குகின்றன. சில கட்டுரைகள் ஜெயகாந்தனின் "நினைத்துப் பார்க்கிறேன்'-ஐ நினைவுபடுத்துகின்றன. ஒரு கட்டுரையில் வரும் பெப்சி நிறுவன தலைமை அதிகாரி இந்திரா நூயி தன் மகளைப் பற்றி எழுதியிருக்கும் பகுதி ஆண்களை மிகவும் சிந்திக்க வைக்கக் கூடியது.
அநேகமாக எல்லாக் கட்டுரைகளிலுமே பாரதியார், காற்று, மழை, குழந்தைகள், காகம் என்று அடிக்கடி வந்து கொண்டிருப்பது ஒன்றும் குற்றமல்ல. ஒரு ஜன்னலைப் போலவே எதையும் சாராது, நடுநிலைப் பார்வையில் பார்க்கப்பட்ட செறிவான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum