தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மருந்து வாங்கப் போறீங்களா?

Go down

மருந்து வாங்கப் போறீங்களா? Empty மருந்து வாங்கப் போறீங்களா?

Post  meenu Tue Mar 12, 2013 1:07 pm



மருந்து வாங்கப் போறீங்களா? - இ.க.இளம்பாரதி; பக்.128; ரூ.80; இ.க.இளம்பாரதி, எம்.1388, கம்பன் நகர், ராஜகோபாலபுரம் போஸ்ட், புதுக்கோட்டை - 622 003.

இன்று சுற்றுச் சூழல் மாசடைந்துவிட்டது. உண்ணும் உணவு ரசாயன உரங்களால் விளைவிக்கப்பட்டவை. உடல் உழைப்புக் குறைந்துவிட்டது. மருந்தும் கையுமாக மனித வாழ்க்கை தத்தளிக்கிறது. ஆனால் நாம் பயன்படுத்தும் மருந்துகள் எப்படிப்பட்டவை? அவற்றால் பக்க விளைவுகள் ஏற்படுவது ஏன்? தடை செய்யப்பட்ட மருந்துகளைக் கண்டறிவது எப்படி? ஆண்டி பயாடிக் மருந்துகளால் ஏற்படும் விளைவுகள் எவை? மருந்துகள் எவ்விதம் தயாரிக்கப்படுகின்றன? எப்படிச் சந்தைப்படுத்தப்படுகின்றன? என்பனவற்றைப் பற்றியெல்லாம் விரிவாக, அதே சமயம் சுவையாகக் கூறும் நூல்.

"நாம் தலைவலி மற்றும் காய்ச்சலுக்காக அடிக்கடி பயன்படுத்தும் பாரசிடமால் மருந்தை மருத்துவரின் ஆலோசனையின்றி தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டிருந்தால், கண்டிப்பாக அது கல்லீரலில் நச்சு சார் தன்மையை ஏற்படுத்தி, இறுதியில் கல்லீரலைச் செயலற்றதாக்கிவிடும்' என்பன போன்ற தகவல்கள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன.

தடை செய்யப்பட்ட தனி மருந்துகள் மட்டுமல்லாமல், பல அங்கீகரிக்கப்படாத கூட்டு மருந்துகளும் இந்தியாவில் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன என்று கூறும் நூலாசிரியர், எந்தெந்த மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன என்பதையும் கூறுகிறார். அவை நாம் பயன்படுத்தும் மருந்துகளாகவும் இருந்து நம்மைப் பயமுறுத்துகின்றன.

மருந்துகளின் நன்மை, தீமை இரண்டையும் எடுத்துக் கூறும் நூலாசிரியர், மருந்தின் தீமைகளில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள வழிகாட்டுகிறார். சிறந்த நூல்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum