முடிக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல் போடலாமே...
Page 1 of 1
முடிக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல் போடலாமே...
பெண்களின் தோற்றத்தை மேம்படுத்திக்காட்டும் சிறப்பு கூந்தலுக்கு உண்டு. ஆனால் அதை பராமரிப்பது சிரரமான வேலை. போதிய நேரம் ஒதுக்க முடியாத நிலை பலருக்கு. இதனால், நீண்டு அடர்ந்த கூந்தலைக்கூட குட்டையாக வெட்டிக் கொள்ளும் பெண்கள் அதிகம்.
முடி சின்னதாக இருக்கே என்று கவலைப்படாமல் நம் முக அமைப்பு எப்படியோ அதற்கேற்ப விதவிதமாக கூந்தலை அலங்காரம் செய்து கொள்ளலாம்.
முடி நீண்டு அடர்த்தியாக இருந்தால், எந்த மாதிரி தலையலங்காரமும் அழகாகத்தான் இருக்கும், இருந்தாலும் கழுத்தின் அமைப்பு, முக வடிவத்தை பொருத்து உங்களுக்கு பொருந்தக்கூடிய விதவிதமான கொண்டை, பின்னல்களை போட்டுக் கொள்ளுங்கள்.
குட்டையான முடி: -
* உருண்டை முகம்: கோணல் வகிடு எடுக்காமல் தூக்கி போடலாம். நடு வகிடு எடுத்து பின்னல் போட்டுக் கொள்ளலாம்.
* நீளமுகம்: ஒரு பக்கம் கோணல் வகிடு எடுத்து, இரு பக்கமும் வாரிவிட்டால் முகம் சற்று அகலமாக காட்டும்.
* அகலமான முகம்: முடியை பின்புறம் எடுத்து காதை மறைக்கும்படி வாரலாம். முகம் உருண்டையாக தெரியும்.
* அகலமான நெற்றி: முன்பக்க முடியை சற்று எடுத்து பிரிஞ்ச் எனப்படும் ஹேர் கட் பண்ணலாம். நெற்றி முழுக்க முடி முன்னால் வறுமாறு கட் பண்ணலாம்.
* குட்டைக் கழுத்து: குதிரை வால் கொண்டை பொருத்தம்.
* தாடை நீண்ட ஓவல் வடிவ முகம்: முடியை நேராக்கி "சி" வடிவமாக வகிட்டிலிருந்து தாடை வரை வந்து விழுவது போல் அமையுங்கள் அழகாக வித்யாசமாக இருக்கும்.
நீளமான முடி:-
* பின்னல், கொண்டை இரண்டும் கச்சிதமாக பொருந்தும்.
* ப்ரென்சு ப்ளெய்ட் போடலாம். ஆனால் முடி அடர்த்தியாக, முகம் ரவுண்டாக இருக்க வேண்டும்.
* முடியை தூக்கி வாரி கொண்டையின் மேல் க்ரென்ச் நாட் போடலாம். கழுத்து குட்டையாக இருப்பவர்கள் போட்டால் அழகு தான்.
* நீளக் கழுத்து: காது லெவலுக்கு மேல் கொண்டை போடக்கூடாது.
* மீடியக் கழுத்து: பின் கொண்டை போட்டால் ஆபரணங்கள் எடுப்பாக இருக்கும். கழுத்தை ஒட்டி வரும்படியாக சற்று இறக்கி கொண்டை போடலாம். ரொம்ப இறக்கி விடாதீர்கள்
* மிக நீண்ட கழுத்து: கழுத்தை ஒட்டினார்போல் சற்று முகதையும் மறைக்கும் அளவுக்கு ரோல்ஸ் போன்ற கொண்டைகள் போடலாம். கழுத்தை மூடும்படியாக பூ வைத்து கொள்ளலாம்.
* உருண்டை முகம்: உயரமான கொண்டை மிகவும் அழகாக இருக்கும்.
* ஓவல் முகம்: காதை மூடினமாதிரியான கொண்டை கழுத்தின் ஆரம்பம் வரை இருக்கட்டும். முன்னால் இருந்து பார்த்தால் தெரியுமாறு பூ வைத்தால் முகம் உருண்டையாக தெரியும்.
* சதுரமுகம்: கொண்டை போட்டு, காதோர முடியை சுருட்டி தொங்கவிட்டால் மேலும் அழகாக இருக்கும்.
* குண்டானவர்கள்: கொண்டை வேண்டாம் பின்னல் நல்லது.
* உயரமானவர்கள் கொண்டை வேண்டாம்.
விசேஷங்களுக்கு செல்லும் போது கொண்டையில் வலை, மணி போன்ற பொருட்களை அலங்கரித்தால், கூடுதல் அழகாக தெரியும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சம்மர் ஹேர்ஸ்டைல்!
» தல’ தோணியின் எந்த 'ஹேர்ஸ்டைல்' உங்களுக்குப் பிடிக்கும்?
» திருமணத்திற்க்கு ஏற்ற நாட்கள்
» குட்டீஸ்க்கு ஏற்ற செல்லப்பிராணிகள்!
» கர்ப்பிணிகளுக்கு ஏற்ற பீட்ரூட்
» தல’ தோணியின் எந்த 'ஹேர்ஸ்டைல்' உங்களுக்குப் பிடிக்கும்?
» திருமணத்திற்க்கு ஏற்ற நாட்கள்
» குட்டீஸ்க்கு ஏற்ற செல்லப்பிராணிகள்!
» கர்ப்பிணிகளுக்கு ஏற்ற பீட்ரூட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum