தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆஸ்கர்: சிறந்த வேற்றுமொழித் திரைப்படம் - முன்னோட்டம்

Go down

ஆஸ்கர்: சிறந்த வேற்றுமொழித் திரைப்படம் - முன்னோட்டம் Empty ஆஸ்கர்: சிறந்த வேற்றுமொழித் திரைப்படம் - முன்னோட்டம்

Post  meenu Mon Mar 11, 2013 2:30 pm

இந்த வருடம் ஆஸ்கர் திரைப்பட விருதுகளில் சிறந்த வேற்றுமொழித் திரைப்படத்துக்காக போட்டியிடும் படங்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

84ஆவது ஆஸ்கர் திரைப்பட விருது விழா நாளை ஞாயிறன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடக்கவுள்ளது.

இந்த விருதுகளைப் பொறுத்தவரை பல பிரிவுகளில் வழங்கப்படும் விருதுகள் அதிகம் தலைப்புச் செய்திகளில் இடம்பெறுகின்றன என்றாலும் ஆங்கிலமல்லாத வேற்றுமொழித் திரைப்படங்களில் சிறந்த படம் என்ற பிரிவு அதிகம் பேசப்படாத ஒரு பிரிவாகத்தான் இருந்துவருகிறது.

ஆனால் இந்த வருடம் இந்தப் பிரிவில் களம் நிற்கின்ற படங்கள் மிகவும் சிறந்த படங்களாக அமைந்திருக்கின்றன என்று

பெரும்பான்மையான விமர்சகர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
எ ஸெபெரேஷன்

சென்ற மாதம் நடந்த கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் எ செபெரேஷன் என்ற இரானியப் படம் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற விருதை வென்றது.

ஆஸ்கரிலும் இந்தப் பிரிவில் இப்படமே வெல்லும் என்று பலரும் நம்புகின்றனர்.

மணவாழ்க்கை முறிந்துபோகக்கூடிய நிலையிலுள்ள ஒரு நடுத்தர வயதுத் தம்பதியர் பற்றியது இந்தக் கதை.

தெஹ்ரானைக் கதைக்களமாகக் இத்திரைப்படம் நகர்கிறது.

இந்தக் குடும்பத்தின் ஒடுங்கிப்போன வயோதிபர் ஒருவரைப் பராமரிப்பதற்காக நியமிக்கப்படும் ஆள் சம்பந்தப்பட்டு ஒரு சம்பவம் நடக்க, குடும்பத்துக்குள் பிரச்சினையும் பரபரப்பும் தோன்றுகிறது என்பதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.

இந்தத் திரைப்படம் இன்னொரு பிரிவிலும்கூட விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள பட்டியலில் இடம்பிடித்துள்ளது. ஆம் சிறந்த திரைக்கதை என்ற பிரிவிலும் இது போட்டி போடுகிறது.
ஃபுட்நோட்

இஸ்ரேலியத் திரைப்படமான ஃபுட்நோட் பரபரப்பு இல்லாமல் மிதமாகச் செல்லும் ஒரு திரைப்படம் ஆகும்.

வயது கூடிய ஒரு தந்தை, நடுத்தர வயதில் உள்ள அவரது மகன். இருவரும் வெவ்வேறு துறைகளில் நிபுணர்களாக இருக்கிறார்கள்.

மகனுக்கு வழங்க வேண்டிய ஒரு விருதை அரசாங்கம் தவறிப்போய் தந்தைக்கு வழங்கிவிடுகிறது. விருதுகளையோ வேலை சம்பந்தமான முன்னேற்றத்தையோ பெரிய விஷயமாக நினைக்காதவர் தந்தை.

ஆனால் வேலையில் முன்னுக்கு வரவேண்டும் என்ற துடிப்புள்ளவர் மகன்.

அரசாங்கம் செய்த தவறால் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பிரச்சினை உருவாவதாக இந்தப் படம் செல்கிறது.
இன் டார்க்னஸ்

சிறந்த வேற்றுமொழித் திரைப்படப் பிரிவில் களம் நிற்கின்ற இன் டார்க்னஸ் என்ற போலந்து மொழிப் படம், இரண்டாம் உலகப் போர் காலத்தில் நடக்கின்ற ஒரு கதையைக் கொண்டது.

நாடு கடந்து போலந்து மக்கள் செழிந்து வாழக்கூடிய உக்ரைன் நாட்டு ல்வொவ் நகரம் இந்தப் படத்தின் களமாக அமைந்துள்ளது.

பார்ப்போரை ஆட்கொள்ளும் சுவாரஸ்யத்துடன் இக்கதை நகர்கிறது.

நாஜிக்களிடம் சிக்காமல் உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக பாதாள சாக்கடைக்குள் ஒளிந்து வாழும் சில யூதர்களைச் சுற்றி கதை செல்கிறது.

நிஜமான சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த படம் இது என இயக்குநர் அக்னியஸ்கா ஹொல்லண்ட் தெரிவித்துள்ளார்.
முஸ்ஸியர் லஸார்

கனடியத் திரைப்படமான முஸ்ஸியர் லஸார், மாண்ட்ரியல் நகரத்துப் பள்ளிக்கூடத்தில் வாத்தியார் வேலைக்குச் சேரும் அல்ஜீரியக் குடியேறி ஒருவர் பற்றியது.

முதலில் பார்ப்பதற்கு ஒரு மாதிரியான ஆளாகத் தெரிந்தாலும், விரைவில் மாணவர்களின் அன்புக்குப் பாத்திரமானவராக அவர் எப்படி மாறுகிறார் என்பதாக இப்படம் செல்கிறது.
புல்ஹெட்

ஃப்ளெமிஷ் மொழி பெல்ஜியத் திரைப்படம் புல்ஹெட் ஆகும்.

இறைச்சிக்காகவும் பாலுக்காகவும் மாடு வளர்க்கும் பெரும் பண்ணைகளின் பின்னணியில் நடக்கும் ஒரு குற்றம் பற்றிய திகில் படம் இது.

ஆனாலும் சாதாரணத் திகில் படம்தான் என்று கூறி ஒதுக்கிவிட முடியாத அளவுக்கு இப்படம் சிறப்பாக இருக்கிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆஸ்கர்: சிறந்த வேற்றுமொழித் திரைப்படம் - முன்னோட்டம்
» சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை 3 முறை பெற்ற நடிகர்
» தெற்காசிய திரைப்பட விழாவில் வழக்கு எண் 18/9 திரைப்படம் சிறந்த படத்திற்கான விருது
» 85 - வது ஆஸ்கர் விழா: "ஆர்கோ' படத்துக்கு ஆஸ்கர் விருது
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum