ஆட்டத்தை நிறுத்திய நடுவர்களின் முடிவால் அதிருப்தி: மஹேல
Page 1 of 1

ஆஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடிவரும் ஒரு நாள் தொடரின் நான்காவது ஆட்டம் மழை காரணமாக பாதியில் கைவிடப்படுவதற்கு நடுவர்கள் எடுத்திருந்த முடிவு சம்பந்தமாக புகார் தெரிவித்து சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ரெப்ரீ ஜவகல் ஸ்ரீநாத்துக்கு இலங்கை அணி நிர்வாகம் கடிதம் எழுதும் என இலங்கை அணித் தலைவர் மஹேல ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஏனைய கிரிக்கெட் தொடர்களில் மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டதற்கு முடிவு எடுக்கப்பட்டதற்கான கொள்கைக்கும் இந்த ஆட்டம் கைவிடப்படுவதற்கு எடுக்கப்பட்ட முடிவிற்கும் இடையில் முரண்பாடு இருப்பதாகக் மஹேல ஜெயவர்த்தன கூறினார்.
தொடர்புடைய விடயங்கள்
விளையாட்டு
ஆட்டத்தின் முதல் பாதியில் ஆஸ்திரேலிய மட்டை வீச்சு முடிந்திருந்த நிலையில் மழை வர, ஆடுகளம் விளையாட்டுக்கு ஏற்றதாக இல்லை எனக் கருதி ஆட்ட நடுவர்கள் இந்த ஒரு நாள் ஆட்டத்தைக் கைவிட்டிருந்தனர்.
ஆனால் இலங்கையில் நியூசிலாந்து அணி அண்மையில் விளையாட வந்திருந்தபோது விளையாடுவோருக்கு ஆபத்து என்ற நிலையில் மட்டும்தான் ஆட்டம் கைவிடப்படும் அதுவரை ஆட்டம் தொடரத்தான் வேண்டும் என ஆட்ட நடுவர்கள் கூறியிருந்தனர் என்று மஹேல சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாவை வெறும் 222 ரன்களில் சுருட்டியிருந்த நிலையில் இந்த ஆட்டம் நடந்திருந்தால்,தம்மால் இந்த ஆட்டத்தை எளிதில் வென்றிருக்க முடியும் என்று இலங்கை கருதுகிறது.
ஐந்து ஆட்டங்கள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பாரதிராஜாவின் முடிவால் இயக்குனர்கள் மனக்கசப்பு?
» 100 சதவீதம் துல்லியமாகாத வரை நடுவர்களின் தீர்ப்பை மீளாய்வு செய்யும் முறைக்கு இந்தியா ஆதரவளிக்காது: டோனி
» நிக்காஹை நிறுத்திய நடிகை
» 31வது சதம் அடித்தார் மஹேல!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum