தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கோவிலூர்

Go down

 பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கோவிலூர்  Empty பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கோவிலூர்

Post  meenu Fri Mar 08, 2013 2:24 pm

மிருகண்டு முனிவர், ஒரே நேரத்தில் வாமன, திருவிக்ரம அவதார கோலங்களைக் காண வேண்டினார். அதற்காக எதுவும் உண்ணாது, தீவிர விரதமிருந்த முனிவரின் வைராக்கியத்தை பிரம்மன் கண்டு வியந்தார். ‘‘மிருகண்டு முனிவரே, தாங்கள் கிருஷ்ண பத்திரா நதிக்கரையில், கிருஷ்ண க்ஷேத்ரத்தில், கிருஷ்ணன் எனும் திருநாமத்தோடு பகவான் கோயில் கொண்டிருக்கும் தலத்திற்குச் சென்று தவமியற்றுங்கள்’’ என்று பணித்தார். உடனே, முனிவர் இந்த திருக்கோவிலூர் வந்து தவமியற்றி வாமன, திருவிக்ரம தரிசனத்தை கண்டார். இந்த தலத்திற்கு ஆதியில் கிருஷ்ணன் கோயில் என்றே பெயர் இருந்திருக்கிறது. சதுர் யுகங்களுக்கு முற்பட்ட தொன்மையை உடையது.

கோபாலன் எனும் சொல்லே கோவாலன் எனத் திரிந்தது. அதுவே திருக்கோவலூர் என்றும் கோவிலூர் என்றும் ஆனது. மிருகண்டு முனிவருக்கு திருவிக்ரமராக அவதாரத்தைக் காட்டும் முன் கிருஷ்ணனாக பகவான் எழுந்தருளியிருந்த சந்நதி, தற்போது இத்தலத்தின் முன்புறத்திலேயே உள்ளது. சாளக்கிராமத் திருமேனியுடன் ஆதிசந்நதியில் அருள்பாலிக்கிறார் கிருஷ்ணர். இங்கு கிருஷ்ணன் ஆனந்தமாக உறைவதை அறிந்த துர்க்கை விந்திய மலையிலிருந்து புறப்பட்டு தானும் இங்கு கோயில் கொண்டாள். துர்க்கைக்கு இங்கே கோயிலும், வழிபாடுகளும் உண்டு. இதை திருமங்கையாழ்வார், ‘‘விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல் பூண்ட கடிபொழில்’’ என்று புகழ்கிறார். கிருஷ்ண பத்திரா நதியைத்தான் பெண்ணை ஆறு என்கிறோம்.

மகாபலி அளித்த தானத்தை கண்டு வியந்தல்லவா பெருமாள் இங்கு திருவிக்ரமனாக காட்சி தருகிறார். தன்னையே கொடுக்கிறானே இந்த தியாகி என்கிற ஆச்சரியத்தின் உயரம் அது! திருவிக்ரமன் எனும் இந்த கோலத்தை விராட்புருஷ நிலை என்பார்கள். அங்கிங்கெனாதபடி சகலமும் எம்பெருமான்தான் என்பதை உணர்த்தும் நிலை. மேலும் கீழும், இடமும் வலமும் நானே இருக்கிறேன் என்று காட்டும் விஸ்வரூப தரிசனம். எது சிறியதோ அந்த வாமனமும் நான்தான். எது பெரியதோ அந்த விக்ரமனும் நானேதான் என்று சொல்லும் தத்துவம் இங்கு கோயிலாகியிருக்கிறது. இடது திருக்கரத்தில் சக்கரமும் வலக் கரத்தில் சங்கும் ஏந்தி சியாமள வர்ணனாக அழகு காட்டுகிறான் கிருஷ்ணன்.

திருமார்பில் ஸ்ரீவத்ஸமும் கண்டத்தில் கௌஸ்துபமும் காதுகளில் குண்டலமும் வைஜெயந்தி வனமாலை புரள தேஜோ மயமாக விளங்குகிறான். பிரகலாதன், மகாபலி, விஷ்வக்சேனர் புடை சூழ ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக எழுந்தருளியிருக்கிறான். உற்சவராக ஆயன், ஆயனார், கோவலன், கோபாலன் எனும் பல்வேறு திருநாமங்களோடு கிருஷ்ணன் அருள்பாலிக்கிறார். முதன் முதலாக ஆழ்வார்களால் பாடப்பட்ட திவ்யதேசம் இது. ‘வையம் தகளியாய்’ என்று பொய்கையாழ்வாரும் ‘அன்பே தகளியாய்’ என்று பூதத்தாழ்வாரும் ‘திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்’ என்று பேயாழ்வாரும் உருகிப் பாடிய திவ்யதேசம் இது. திவ்ய பிரபந்தத்தின் விளைநிலமாக இருப்பதால் இத்தலம் ஜீவாத்மாக்களை கடைத்தேற்றும் முக்தி க்ஷேத்ரமாகவும் விளங்குகிறது. விழுப்புரம், திருவண்ணாமலையிலிருந்து திருக்கோவிலூரை எளிதில் அடையலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum