குணநதீஸ்வரர் கோயில் தீர்த்தவாரி உற்சவம்
Page 1 of 1
குணநதீஸ்வரர் கோயில் தீர்த்தவாரி உற்சவம்
ராமநாதபுரம்: குணநதீஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச திருவிழாவையொட்டி நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவிலிருந்து 5 கிமீ தூரத்தில் அக்கிரமேசி கிராமம் உள்ளது. இங்குள்ள மஞ்சக்கொல்லை வைகையாற்று கரையோரம் குணநதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட கோயிலாகும். தைப்பூசத்தையொட்டி இங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
நயினார்கோயில், அக்கரமேசி, சின்ன அக்ரமேசி, சிறகிக்கோட்டை, மஞ்சக்கொல்லை, உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான
பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயிலில் சிறப்பு நிகழ்ச்சியாக கிராமங்களில் விளையும் காய்கறிகள் மற்றும் ஆடு, கோழி போன்றவை பொதுமக்கள் காணிக்கையாக கோயிலுக்கு செலுத்துவர். இந்தாண்டும் ஏராளமானோர் காணிக்கையாக காய்கறி, கனிகளை செலுத்தினர். நூற்றுக்கணக்கானோர் மொட்டை போட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். நயினார்கோயிலில் இருந்து நாகநாதர், சவுந்தரநாயகி அம்பாள் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் கோயிலை வந்தடைந்தனர்.
அங்கு குணநதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அங்கிருந்து நேற்று முன்தினம் மதியம் நாகநாதசுவாமி-சவுந்தரநாயகி அம்பாள் மஞ்சக்கொல்லை வைகை ஆற்றங்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. கிராமங்களில் விளைந்த பூசணி, கத்தரிக்காய், பீர்க்கை, வெண்டை, தக்காளி, மிளகாய், புடலை உள்ளிட்ட காய்கறிகளை பக்தர்கள் ஆற்றில் வீசினர். வீசிய காய்கறிகளை பலர் எடுத்து வீட்டிற்கு பிரசாதமாக கொண்டு சென்றனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குணநதீஸ்வரர் கோயில் தீர்த்தவாரி உற்சவம்
» பெண்ணையாறு சங்கமத்தில் பாடலீஸ்வரர் சுவாமிக்கு தீர்த்தவாரி

» வளைகாப்பு உற்சவம்
» திருப்பதி தெப்ப உற்சவம் : 23ம் தேதி தொடக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum