சுறுசுறுப்பாகும் புலிகேசி
Page 1 of 1
சுறுசுறுப்பாகும் புலிகேசி
வடிவேலு தனது புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார் என்று பல மாதங்கள் முன்பே எழுதியிருந்தோம். அப்போது அம்மாவின் கடுங்கோபத்துக்கு இலக்காக இருந்தவர் இப்போது மீண்டும் சுறுசுறுப்பு காட்டுகிறார்.
சமீபத்தில் முதல்வர் கலந்து கொண்ட விழாவிற்கு வடிவேலுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால் அவர் செல்லவில்லை. இது கட்சி வட்டாரத்தில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி வடிவேலுக்கு சில்லரை பிரச்சனைகளையும் ஏற்படுத்தியது. ஆஹா... மீண்டும் மொதல்லேர்ந்தா என்று விழி பிதுங்கியவர் அவசர அவசரமாக, அந்த அழைப்பை யார் அனுப்பினாங்கன்னு குழப்பமா இருந்திச்சி அதுதான் போகலை என்று ஒரு வேப்பிலை ஓபன் பேட்டி அளித்தார்.
இதில் அவர் உருகியிருப்பதைப் பார்த்து கட்சி வட்டாரமும், அம்மா மனசும் சாந்தமடைந்ததாக பேச்சு. இதைவிட நல்ல சந்தர்ப்பம் இனி அமையாது என்றுதான் படவேலைகளில் சுறுசுறுப்பை காட்டத் தொடங்கியிருக்கிறார்.
முழுமையாக அம்மாவிடம் சரணடைந்த பிறகு புலிகேசியின் அறிவிப்பை வெளியிடுவார் என்கின்றன அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum