தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூடி மறைக்கப்பட்ட தாண்டவம் வழக்கு?

Go down

மூடி மறைக்கப்பட்ட தாண்டவம் வழக்கு?  Empty மூடி மறைக்கப்பட்ட தாண்டவம் வழக்கு?

Post  ishwarya Fri Mar 08, 2013 11:36 am


தாண்டவம் எனது கதை என உதவி இயக்குனர் பொன்னுசாமி புகார் தந்தது தெ‌ரிந்திருக்கும். இந்த புகார் இயக்குனர் சங்கத்துக்கு சென்றது. பொன்னுசாமி தனது ஸ்கி‌ரிப்டை அவர்களிடம் சமர்ப்பித்தார்.


தாண்டவம் பொன்னுசாமியின் கதையா இல்லை விஜய்யின் சொந்த கற்பனையா என்று இதுவரை இயக்குனர்கள் சங்கம் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. தாண்டவத்தை தயா‌ரித்த யு டிவி பெ‌ரிய நிறுவனம் என்பதாலும், சங்கத்தின் அதிகாரமிக்கவர்கள் அந்த நிறுவனத்தில் படம் இயக்க இருப்பதாலும் பொன்னுசாமியின் புகார் மூடி மறைக்கப்படுவதாக உதவி இயக்குனர்கள் சிலரே பேசி வருகின்றனர்.

இந்நிலையில் சென்ற வெள்ளிக்கிழமை பொன்னுசாமி அளித்த புகா‌ரின் பே‌ரில் யு டிவி தனஞ்செயன் நீதிமன்றத்தில் ஆஜராகி செவ்வாய்கிழமை வரை - அதாவது இன்று வரை பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோ‌ரியிருக்கிறார். இந்தத் தகவல் பத்தி‌ரிகைகள் உள்பட எந்த மீடியாவிலும் குறிப்பாக இணையங்களில் வெளிவரவில்லை, அது ஏன் என்று சினிமா குறித்து இணையத்தில் எழுதிவரும் கருந்தேள் கண்ணாயிரம் என்பவர் தனது வலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். யு டிவி பெ‌ரிய நிறுவனம் என்பதால் தாண்டவம் வழக்கை மீடியாக்கள் மூடி மறைப்பதாகவும் அவர் குற்றம்சாற்றியுள்ளார்.

இந்நிலையில் சனிக்கிழமை பொன்னுசாமிக்கு 25 லட்ச ரூபாய் தரப்பட்டதாக உறுதி செய்யப்படாத செய்தி ஒன்றும் கோடம்பாக்கத்தில் உலவுகிறது. பொன்னுசாமி வழக்கை வாபஸ் பெற்றால் பண விவகாரம் உண்மை என்பது தெ‌ளிவு. இல்லையென்றால் இன்று மீண்டும் வழக்கு நீதிமன்றத்துக்கு வரும்.

கருந்தேள் கண்ணாயிரம் குறிப்பிட்டிருப்பது உண்மையெனில் மீடியாக்களின் மௌனமும், இயக்குனர்கள் சங்கத்தின் பாராமுகமும் கண்டிக்கத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum