திருத்தணி - ராஜ்கிரண் வழக்கு
Page 1 of 1
திருத்தணி - ராஜ்கிரண் வழக்கு
பேரரசு இயக்கி இசையமைத்திருக்கும் திருத்தணி சீண்டுவாரில்லாமல் புராதன பொருளாக மாறிக் கொண்டிருக்கிறது. பரத்துடன் ராஜ்கிரணும் இதில் நடித்திருந்தார். சமீபத்தில் இதன் விளம்பரத்தை - படம் மறந்து போகாமலிருக்க வெளியிட்டிருந்தார்கள். அதற்கு கை மேல் பலன் கிடைத்திருக்கிறது.
இந்தப் படத்தில் நடிக்க ராஜ்கிரண் 80 லட்சங்கள் கேட்டு அறுபதுக்கு முடித்திருக்கிறார்கள். இதில் 36 லட்சங்கள் மட்டுமே ராஜ்கிரணின் கைக்கு வந்திருக்கிறது. மீதியை பலமுறை கேட்டும் நோ ரெஸ்பான்ஸ். இதனால் ஒரேயொரு காட்சியை மட்டும் பெண்டிங் வைத்ததோடு டப்பிங்கும் பேசவில்லை ராஜ்கிரண். பிறகு பஞ்சாயத்தாகி தவணை முறையில் சம்பளம் தருவதாக வாக்குக் கொடுக்க அந்த ஒரு காட்சியை நடித்து தந்தார்.
இப்போது பார்த்தால் மீதி சம்பளத்தை செட்டில் செய்யாமல் படத்தை வெளியிடப் பார்க்கிறார்கள். அப்போ டப்பிங்...? அதை ரகசியமாக வேறு ஆளை வைத்து முடித்திருக்கிறார்கள்.
இப்படியே விட்டால் மீதி பணம் அம்போதான் என்று தடாலடியாக வழக்கு தொடர்ந்திருக்கிறார் ராஜ்கிரண். திருத்தணி வெளியாகும் என்ற சின்ன ஸ்கோப்பும் பணால். ஒரே நன்மை ராஜ்கிரணின் புண்ணியத்தால் திருத்தணி குறித்து நாலு பேருக்குத் தெரிய வந்திருக்கிறது.
திருத்தணி, ராஜ்கிரண் வழக்கு
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum