திருவாச்சி துவையல்
Page 1 of 1
திருவாச்சி துவையல்
* திருவாச்சி இலை _ ஒரு கைய்யளவு
* தேங்காய் துருவல் _ அரை கப்
* புளி _ சிறிய எலுமிச்சை அளவு
* சிறிய வெங்காயம் _ மூன்று
* பச்சைமிளகாய் _ மூன்று(காரத்திற்க்கேற்ப)
* உப்பு _ தேவையான அளவு
* திருவாச்சி இலையை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
* ஒரு அகன்ற வானலியை அடுப்பில் வைத்து,அதில் தேங்காய் துருவலை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
* பின்பு வெங்காயம்,பச்சை மிளகாய்,சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
* அதன் பின் புளியையும்,திருவாச்சி இலையையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு அடுப்பிலிருந்து இறக்கி வைத்து ஆறவிடவும்.
* பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் சிறிதளவே தண்ணீர் சேர்த்து அரைத்து விடவும்.
* மிகவும் சுவையான மணமான திருவாச்சி துவையல் தயார்.
* இதை அம்மியில் அரைத்தால் இன்னும் இதன் சுவை அபாரமாக இருக்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum