ராகி ஸ்டீம்டு சோமாஸ்
Page 1 of 1
ராகி ஸ்டீம்டு சோமாஸ்
என்னென்ன தேவை?
ராகி மாவு - 2 கப்,
வெல்லம் அல்லது கருப்பட்டி - 1 கப்,
தேங்காய் துருவல் - 1 மூடி,
ஏலக்காய் தூள் - சிறிது,
பொடியாக நறுக்கிய பேரீச்சம் பழம் - அரை கப்,
உப்பு - 1 சிட்டிகை,
நெய் அல்லது நல்லெண்ணெய் - சிறிது.
எப்படிச் செய்வது?
ராகி மாவை இளம் சூடாக வறுத்துக் கொள்ளவும். வெல்லம் அல்லது கருப்பட்டியில் ஒரு கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி, நெய்,
உப்பு சேர்த்து, ராகி மாவில் கலந்து வைக்கவும். தேங்காய் துருவலுடன் பேரீச்சம்பழம், ஏலக்காய் தூள் கலந்து வைக்கவும். பிசைந்து வைத்துள்ள ராகி
மாவை சின்னச் சின்ன பூரியாக இட்டு, உள்ளே பூரணத்தை ஸ்டஃப் செய்து, மடித்து, சோமாஸ் கட்டரில் வெட்டி, இட்லி பாத்திரத்தில் துணி போட்டு, வேக வைக்கவும். ஸ்டீம்டு சோமாஸ் ரெடி!
இனிப்பு பிடிக்காத பிள்ளைகளுக்கு தேங்காய் துருவலுடன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, பொடித்த வேர்க்கடலை சேர்த்தும்
இதே முறையில் செய்து தரலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum