டிச.14 ஜீவாவின் டபுள் டமாக்கா
Page 1 of 1
டிச.14 ஜீவாவின் டபுள் டமாக்கா
முகமூடி தோல்வியை மறக்கச் செய்யும் களிம்பாக நீதானே பொன்வசந்தம் ஜீவாவுக்கு அமையுமா? டிசம்பர் 14 ஆம் தேதி இதற்கான பதில் தெரிந்துவிடும். ரிலாக்சாக இருக்க முடியாதபடி அன்றுதான் கும்கியும் வெளியாகிறது.
கௌதம் இயக்கியிருக்கும் நீதானே என் பொன்வசந்தம் கச்சிதமான காதல் படம் என்று சென்சார் உறுப்பினர்கள் யு சான்றிதழுடன் நற்சான்றிதழ் தந்துள்ளனர். இப்போது எந்தப் படத்தைப் பார்த்தாலும் ஆஹா நன்று என தமிழ் புலவர்களைப் போல தலையாட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் தணிக்கை உறுப்பினர்கள்.
டிசம்பர் 14 அன்று டேவிட் படத்தின் ட்ரெய்லரும் வெளியாகிறது. டேவிட் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் விக்ரம், ஜீவா நடித்திருக்கும் படம். தமிழ், இந்தியில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தில் இருமொழிகளிலும் விக்ரம் ஹீரோவாக நடிக்க தமிழில் மட்டும் முக்கிய வேடம் ஒன்றில் ஜீவா நடித்துள்ளார். இந்தியில் இவர் வேடத்தில் நடித்திருப்பவர் நீல் நிதின் முகேஷ்.
லாரா, தபு, இஷா ஷெர்வானி, நாசர், சரிகா என்று முக்கிய நடிகர்கள் பலரும் இதில் நடித்துள்ளனர். பிப்ரவரியில் படம் வெளியாகிறது.
முகமூடி, ஜீவா, நீதானே என் பொன்வசந்தம், கௌதம்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டிச.14 ஜீவாவின் டபுள் டமாக்கா
» சந்தானத்தின் டபுள் டமாக்கா
» இந்தி படத்தில் கவர்ச்சியாக நடிக்க த்ரிஷா டபுள் ஓகே
» டபுள் ரோலில் பிரியாமணி
» டபுள் ஹீரோ கருணாஸ்
» சந்தானத்தின் டபுள் டமாக்கா
» இந்தி படத்தில் கவர்ச்சியாக நடிக்க த்ரிஷா டபுள் ஓகே
» டபுள் ரோலில் பிரியாமணி
» டபுள் ஹீரோ கருணாஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum