தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பரீட்சையில் ஆள்மாறாட்டம்: புதுவை அமைச்சருக்கு சிறைத் தண்டனை

Go down

பரீட்சையில் ஆள்மாறாட்டம்: புதுவை அமைச்சருக்கு சிறைத் தண்டனை Empty பரீட்சையில் ஆள்மாறாட்டம்: புதுவை அமைச்சருக்கு சிறைத் தண்டனை

Post  meenu Sat Mar 02, 2013 1:16 pm

புதுச்சேரியின் கல்வி அமைச்சராக இருந்த கல்யாணசுந்தரம்,
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட
வழக்கில் குற்றத்தை நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

கல்யாணசுந்தரத்துக்கும் இந்த விவகாரத்தில்
சம்பந்தப்பட்டிருந்தவர்கள் வேறு இருவருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறைத்
தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது.

புதுச்சேரியில்
ஆட்சியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் அரசில் கல்வி அமைச்சராக இருந்துவந்த
கல்யாணசுந்தரம், 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் பரிட்சை எழுத
திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்தார்.

இதிலே ஒரு பரிட்சையை அவருக்கு பதிலாக வேறொருவர் எழுதியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பரிட்சைக்காக விண்ணப்பித்தபோது போலி முகவரி கொடுத்து கல்யாணசுந்தரம் அடையாளச் சான்று பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

இது சம்பந்தமாக தமிழக அரசு சம்மன் கொடுக்க முயன்றபோது, அதனை பெற்றுக்கொள்வதை அமைச்சர் கல்யாணசுந்தரம் தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் திண்டிவனம் முதலாவது குற்றவியல்
நீதிமன்றம் அழைப்பாணை வழங்கிய நிலையில், முதல்வர் ரங்கசாமியின்
அமைச்சரவையிலிருந்து கல்யாணசுந்தரம் நீக்கப்பட்டிருந்தார்.

கல்யாணசுந்தரம் மீதும் அவர் செய்த முறைகேட்டுக்கு
உடந்தையாக சிங்கனூர் மேல்நிலைப் பள்ளியில் பரிட்சை அறை கண்காணிப்பாளராக
இருந்த ஆசிரியர் ஆதவன் மற்றும் திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலக ஊழியர்
ரஜினிகாந்த் ஆகியோர் மீதும் திண்டிவனத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

கூட்டுச் சதி, போலி ஆவணங்களைத் தயாரித்தல், போலி
ஆவணங்களைப் பயன்படுத்துதல், குற்றம் செய்யத் தூண்டுதல் ஆகிய குற்றப்
பிரிவுகளின் கீழ் இந்த மூவர் மீதும் குற்றத்தை உறுதிசெய்த மாஜிஸ்திரேட்,
ஒரே காலத்தில் கழிக்கக்கூடிய இரண்டு இரண்டாண்டுச் சிறைத் தண்டனைகளை இந்த
மூவர் மீதும் விதித்துள்ளார்.

இது தவிர ஐயாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

குற்றம்நிரூபிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு இடமளிக்கும் விதமாக தண்டனைக் காலம் ஆரம்பிப்பது ஒத்திப்போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மூவரும் ஜாமினில் வெளிவந்துள்ளனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» குவைட் மன்னரை விமர்சித்ததற்காக ஐந்து வருட சிறைத் தண்டனை!
» பதினொரு மாதக் குழந்தையை வல்லுறவுக்குட்படுத்தியவனுக்கு 20 வருட கடூழியச் சிறைத் தண்டனை!
» தலிபான்களுக்கு பணம் வழங்கிய துருக்கி பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை! ருத்திரகுமாரனுக்கு என்ன தண்டனை?
» பரீட்சையில் பாஸ் செய்வது எப்படி?
» பிரிட்டிஷ் பெண்ணுக்கு மரண தண்டனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum