யாழ் மின் விநியோகத்திட்டம் தொடங்கப்பட்டது
Page 1 of 1

யாழ்ப்பாணத்திற்கான 24 மணித்தியால மின்வினியோகத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது
இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணம் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
யுத்தச் சூழல் காரணமாக தேசிய மின்வினியோக வலைப்பின்னலில் பல வருடங்களாக துண்டிக்கப்பட்டிருந்த யாழ் குடாநாடு பல வருடங்களாகத் துண்டிக்கப்பட்டிருந்தது. போர் முடிவடைந்ததையடுத்து , கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் ஆகிய இடங்களில் தேசிய மின்விநியோக வலைப்பின்னலின் பெரிய மின்மாற்றி நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
யாழ்ப்பாணத்திற்கான மின்விநியோகத் திட்டமானது. 3.5 பில்லியன் ரூபாய் செலவில் செயற்படுத்தப்பட்டிருக்கின்றது.
திறந்துவைக்கப்பட்ட யாழ் மின் விநியோகத்திட்டம்

இதன் மூலம் யாழ் மாவட்டத்திற்கு தடங்கலில்லாத வகையில் நாள் முழுதும் மின்விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதியுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, வடமாகாண ஆளுனர் சந்திரசிறி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய உத்தரவு
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
தடுத்துவைக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய உத்தரவு
இதனிடையே, படையினரால் கைது செய்யப்பட்டு வெலிக்கந்தை புனர்வாழ்வுப் பயிற்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் இருந்து உத்தரவிட்டிருப்பதாக இலங்கை தகவல் திணைக்களம் தெரிவித்திருக்கின்றது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் தகவல் திணைக்களம் தெரிவித்திருக்கின்றது.
யாழ்ப்பாணத்திற்கான யாழ் ஒளி மின் விநியோகத் திட்டத்தை வைபவரீதியாகத் திறந்து வைத்ததன் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக அவர் நாளை புதன்கிழமை வரையில் யாழ்ப்பாணத்தில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஹோ சி மின் ஒரு போராளியின் கதை
» மின்-அஞ்சல் மின்-அஞ்சல்
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சோதனை ஓட்டம்: விரைவில் மின் உற்பத்தி
» மின் ஆற்றல் சார்பு பரிசோதனைகள்
» எதிரணிகளின் யாழ். போராட்டத்தின்போது குழப்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum