முஸ்லிகளுக்கும் ஹலால் கூடாது' : பொதுபலசேனா
Page 1 of 1

இலங்கையில் முஸ்லிம்களுக்கும் கூட ஹலால் முறைமையை அனுமதிக்கக் கூடாது என்றும் ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமையை நாட்டில் இருந்து முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபலசேனா அறிவித்துள்ளது.
கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றிலேயே இந்த அறிவிப்பை அந்த அமைப்பு மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.
இலங்கையில் 9 வீதமாக உள்ள முஸ்லிம்களால் பௌத்த மதத்துக்கும், கலாச்சாரத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
தற்போது அமலில் உள்ள ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமை நகைப்புக்குரியது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
ரவூப் ஹக்கீம் செவ்வி
'இப்படியான நிலைமையை வளரவிடுவது அரசுக்கும், நாட்டுக்கும் நல்லதல்ல'
இலங்கை முஸ்லீம் மக்களுக்கு எதிராக கடும்போக்கு புத்தமதக் குழுக்கள் செயற்படுவது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம்.
கேட்கmp3
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
மாற்று மீடியா வடிவில் இயக்க
முஸ்லிம்கடைகள், சிங்களப் பெண்களை மலடாக்கும் ஒரு ரகசியப் பொருள் கலக்கப்பட்ட மிட்டாய்களை விற்பதாகக்கூட சிலர் குற்றம்சாட்டுகிறார்கள்.
முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு ஆலோசகராக இருந்த ஹரிம் பீரிஸ், இந்தப் பிரச்சாரத்தை, 1930களில் யூதர்களுக்கு எதிராக நாஜிக்கள் நடத்திய பிரச்சாரத்துடன் ஒப்பிட்டுள்ளார்.
பொதுபலசேனா அமைப்பை அரசாங்க அமைச்சர்கள் சிலர் விமர்சிக்கின்றபோதிலும், அந்த அமைப்புக்கு அரசாங்கத்தில் உள்ள ஒருசில தரப்புக்களில் இருந்து ஆதரவு கிடைப்பதாகவும் கூறப்படுகின்றது.
பள்ளிவாசல் மீது தாக்குதல்
இதற்கிடையே கேகாலை மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றின் மீது கல்வீச்சு நடந்ததாகவும் சில செய்திகள் கூறுகின்றன.
கேகாலை நகரில் இன்று அதிகாலை நடந்த சம்பவத்தில் அடையாளம் தெரியாத ஒரு குழுவினர், இந்த நகரின் பிரதான மசூதியை கல்லெறிந்து தாக்கியிருக்கின்றனர் என்று பொலிசார் கூறினர்.
இலங்கையில் முஸ்லீம் மற்றும் கிறித்தவ வழிபாட்டிடங்கள் சமீப காலங்களில் இது போன்றே தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றன. இதைச் செய்தவர்கள் புத்தமத கடும்போக்குவாதிகள் என்று தோன்றுகிறது. இவர்கள் இலங்கையின் சிங்கள பௌத்தமதத் தன்மையை வலியுறுத்துகிறார்கள். மேலும், சிறுபான்மையினர் நாட்டின் பெரும்பான்மை இனத்தையும், அவர்களின் அடையாளத்தையும் அச்சுறுத்தக்கூடாது என்றும் கூறிவருகிறார்கள்.
இதற்கிடையே சிறுபான்மையின முஸ்லீம்களுக்கு எதிரான பௌத்த கடும்போக்கு அமைப்புக்களின் இப்படியான நடவடிக்கைகளை முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் கண்டித்துள்ளார்.
அவரது செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முஸ்லிகளுக்கும் ஹலால் கூடாது' : பொதுபலசேனா
» வெள்ளை வெளேல் என்று இருப்பவர்கள் சில விஷயங்களை செய்யவேக் கூடாது. அதாவது அவர்கள் நிறத்திலேயே வெள்ளையாக இருப்பதால் அதிகமாக பவுடர் பூசிக் கொள்ளக் கூடாது. அப்படி செய்யும் போது அவர்களது அழகை பவுடர் குலைத்து விடும். அதேப்
» அரசே ஹலால் சான்றிதழ் வழங்கட்டும்
» பள்ளிவாசலை உடன் அகற்றாவிட்டால், அகற்றும் வழி நமக்குத் தெரியும் என்று அதட்டியுள்ளது பொதுபலசேனா! (அச்சுறுத்தல் கடிதம் இணைப்பு)
» முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால் உணவு விநியோகிக்க ஏற்பாடு செய்யப்படும்'

Permissions in this forum:
You cannot reply to topics in this forum