அக்னி வெயிலை சமாளிப்பது எப்படி
Page 1 of 1
அக்னி வெயிலை சமாளிப்பது எப்படி
கத்திரி வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. அதிலும், குறிப்பிட்ட பகுதிகளில் 100 டிகிரிக்கும் மேல் சுட்டெரிக்கிறது வெயில். இதை சமாளிக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சிலர் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க குளிர் பிரதேசங்கள், மலை பிரதேசங்களை நோக்கி படையெடுக்கின்றனர். கோடை வெயிலின் தாக்கம் உடலை மட்டும் பாதிப்பதில்லை. தோலையும் பெரிய அளவில் பாதிக்கிறது. சூரிய ஒளி வெப்பத்தின் காரணமாக வியர்வை அதிகம் ஏற்பட்டு உடலில் வேர்க்குரு, கொப்பளங்கள் ஏற்படுகின்றன. இதனால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
உணவுகள்:
கோடை காலத்தில் பொரித்த உணவுகள், எண்ணெய்ப் பொருட்கள் சாப்பிடுவதை வெகுவாக குறைக்க வேண்டும். குறிப்பாக கொழுப்பு சத்து கூடிய உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், கோடை காலத்தில் உடல் சோர்வுடன் இருப்பதால் சாப்பிட்ட உணவுகள் செரிமானம் ஆக அதிக நேரம்
எடுக்கும். அதனால், உடல்நலக் கோளாறு ஏற்படும். இதை கருத்தில் கொண்டு கோடைக்கு இதமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதே சிறந்தது.
டீ, காபி:
டீ, காபியை அதிகமாக குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கோடை காலத்திலும் அதை தொடர்வார்கள். அதிலும், நேரம் தவறாமல் டீ அல்லது காபி குடித்தால்தான் வேலை ஓடும் என்று அதற்கு காரணமும் சொல்வார்கள். அதிலும் சிலர் சர்க்கரை அதிகமாகவும், சிலர் டீ, காபி தூள் தூக்கலாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். இந்த பழக்கத்தை கோடையிலாவது குறைத்துக்கொள்ள வேண்டும்.
டீ, காபி குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். அதனால், உடலில் உள்ள நீரின் அளவு வெகுவாக குறைந்து விடும். வெயிலின் தாக்கத்தை சமாளிக்க உடலில் நீரின் அளவு குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டும். இது குறையும் பட்சத்தில் தோல் உலர்ந்து விடும். மேலும், சிகரெட், புகையிலை பயன்படுத்துவதையும் மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்.
ஆடைகள்:
ஆடை விஷயங்களுக்கு இதர காலங்களில் முக்கியத்துவம் கொடுக்கிறோமோ இல்லையோ, கோடைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
சூரிய வெப்பத்தால் ஏற்படும் வியர்வை உடல் மடிப்பு, கை, கால் இடுக்குகளில் ஆடையுடன் படிந்துவிட்டால் கொப்பளங்களுக்கு வழிவகுக்கும். மேலும், பாலிஸ்டர் ஆடைகள் அணிந்தால், அவை வெயிலின் தாக்கத்தை அதிகப்படுத்தி உடலை பாதிக்கும். கருப்பு போன்று மங்கிய ஆடைகளுக்கு ஒளி
மற்றும் வெப்பத்தை உட்கிரகிக்கும் தன்மை அதிகம். அதனால், இதுபோன்ற ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். பருத்தி ஆடைகள், மெல்லிய இழைகளால் ஆன ஆடைகளை அணியலாம். எடை குறைந்த ஆடைகளையும் அணியலாம்.
பானங்கள்:
பல்வேறு வகையான குளிர்பானங்கள், மது மற்றும் ரெப்ரிஜிரேட்டரில் வைக்கப்பட்ட தண்ணீர், குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும். அதிலும், நீண்ட
நேரம் வெயில் சுற்றி, திரிந்து வந்தவர்கள் வெப்பம் தாங்காமல் ரெப்ரிஜிரேட்டரில் இருக்கும் பானத்தை உடனே எடுத்து குடிப்பார்கள். அப்படி குடித்தால், உடனே உடல் வெப்பம், தாகம் தணிந்துவிடும் என்று எண்ணி இவ்வாறு குடிப்பார்கள். இது ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். இதமான தண்ணீர், அல்லது மண்பானையில் வைக்கப்பட்ட தண்ணீர், மோர், தயிர், இளநீர் போன்றவற்றை குடிக்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அக்னி வெயிலை சமாளிப்பது எப்படி
» கர்ப்ப கால குமட்டலை சமாளிப்பது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum