காம உணர்ச்சி அமிர்தமா? நஞ்சா?
Page 1 of 1
காம உணர்ச்சி அமிர்தமா? நஞ்சா?
`அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' என்பது பழமொழி.
மனித வாழ்வில் காமம் என்பது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சியை அளிக்கக்கூடிய ஒரு மருந்து என்றால் அது மிகையாகாது.
பாலுறவு அல்லது செக்ஸ் என்பது தீண்டத்தகாத அல்லது கேட்கக் கூடாத கெட்ட வார்த்தையல்ல.
எந்தமாதிரியான தருணத்தில், எந்த முறையில் நாம் அந்த உறவைக் கையாள்கிறோம் என்பதைப் பொருத்தே அது நஞ்சாகிறதா? அல்லது அமிர்தமாக ருசிக்கப்படுகிறதா? என்பது தெரியவரும்.
காமம் என்பது உடலின் பல்வேறு உணர்ச்சிகளில் ஒன்று என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மாம்பழம், ஆப்பிள், வாழைப்பழம் என ஒவ்வொரு பழத்திற்கும் ஒருவித சுவை இருப்பதைப் போல, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் காம உணர்ச்சி என்பது, அவர்களின் தன்மையைப் பொறுத்து வேறுபடலாம்.
நம் உடல்நலம் பாதிக்கப்படும்போது, நோய் நிவர்த்திக்குத் தேவையான குறிப்பிட்ட ஒரு மருந்தை உட்கொள்கிறோம். அதனால் உடல் உபாதைகளில் இருந்து விடுபடுவதைப் போலவே பாலுறவையும் எடுத்துக் கொள்ளலாம்.
கிராமங்களில் பொதுவாக ஊர் சுற்றிக்கொண்டு, வீட்டிலிருக்கும் பெரிசுகளுக்குக் கட்டுப்படாமல் திரியும் விடலைகளைப் பார்த்து, ``சீக்கிரம் இவனுக்கு கால்கட்டு போடணும், அப்பத்தான் சரியா வருவான்' என்று கூறுவதைப் பார்த்திருக்கிறோம்.
அதாவது, வாலிப முறுக்கேறித் திரியும் இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பதால், உரிய நேரத்தில் அவர்களின் மனோநிலையை மாற்றி, பொறுப்புள்ள மனிதனாக்கலாம். திருமணம் முடிந்தால், மனைவியைச் சுற்றி வருவான். வாழ்க்கையில் ஒரு பந்தம், பிடிப்பு ஏற்படும் என்பதை உணர்த்தவே அப்படிக் கூறுவார்கள்.
காமம் என்பது மன அழுத்தம், மனச்சோர்வில் இருந்து மனிதன் விடுபடுவதற்கு ஒரு முக்கியமான உணர்வாகத் திகழ்கிறது.
தவிர, மனித வாழ்க்கை எனும் தாத்பர்யத்தில் தாம்பத்யம் மூலமே சந்ததி பெருக்கம், இனவிருத்தி ஏற்படுகிறது.
எனவே எதற்காக வாழ்கிறோம் என்றால், அடுத்த சந்ததியினரின் நலனுக்காக, அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறோம்.
இவற்றுக்கெல்லாம் மூலாதாரமாக விளங்குவது பாலுறவு அல்லது காம உணர்ச்சியே. தொடர்ந்து வரும் பதிப்புகளில் இதுபற்றிய விரிவான விவரங்களைப் பார்ப்போம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உணர்ச்சி வசப்படலாமா
» தோலில் உணர்ச்சி உண்டாக
» தியாக உணர்ச்சி மிகுந்தது
» பாவேந்தரின் தமிழ் உணர்ச்சி
» உணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி…!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum