சைக்கிளில் வந்தால் விபச்சார விடுதியில் தள்ளுபடி
Page 1 of 1

ஆடி மாதம் பிறக்கப் போகிறது. ஆங்காங்கே துணிக் கடைகளும், நகைக் கடைகளிலும் அதிரடி தள்ளுபடி, ஆடித் தள்ளுபடி என்று அறிவிப்புகள் வெளியாகும் காலம் இது. ஆனால் ஜெர்மனியில் ஒரு அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது ஒரு விபச்சார விடுதி.
விபச்சார விடுதிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சைக்கிளில் வந்தால் கணிசமான ஒரு தொகையை தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருக்கும் தங்களது தொழிலுக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உதவும் என்கிறது அந்த விபச்சார விடுதி நிர்வாகம்.
ஆம். இந்த அதிரடி தள்ளுபடி ஜெர்மனி நாட்டில்தான் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் விபசாரத் தொழில் சட்டப்பூர்வமாக அனுமதி பெற்று நடத்தப்படுகிறது. அங்கு விபசார விடுதிகள் பகிரங்கமாகவே செயல்பட்டு வருகின்றன. பல பகுதிகளில் உள்ள விபச்சார விடுதிகள் கண்ணியமாக நடத்தப்பட்டு வருகின்றன.
எதுவும் தடை செய்யப்படும் போது அல்லது ஒடுக்கப்படும்போதுதானே அதன் போக்கு சீரழிவான பாதையில் செல்கிறது. அதற்கு இந்த விபச்சார தொழிலையே உதாரணமாகக் கொள்ளலாம்.
நம் நாட்டில் விபச்சாரத்திற்கு அனுமதி இல்லை. எனினும், அது நடக்காமலா உள்ளது. சட்டத்திற்குப் புறம்பான வகையிலும், அநாகரீகமான வகையிலும் ஆங்காங்கே நடந்தேறிக் கொண்டுதான் உள்ளது.
சரி ஜெர்மன் விஷயத்திற்கு வருவோம். பெர்லின் நகரில் உள்ள ஒரு விபசார விடுதி தங்களது வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும், புதிய தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, கார் போன்ற வாகனங்களை பயன்படுத்துவதால் அதில் இருந்து கிளம்பும் புகை காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால், சைக்கிளில் வரும் வாடிக்கையாளர்களுக்கு கட்டணத்தில் தள்ளுபடி கொடுத்து உள்ளது.
இப்படி ஒரு திட்டத்தை இதுவரை வேறு ஏதாவது நிர்வாகம் சிந்தித்துள்ளதா? செய்யும் தொழில் வேண்டுமானால் விபச்சாரமாக இருக்கலாம், சிந்தனையில் இவர்கள் உயர்ந்துவிட்டார்கள் அல்லவா?
இது குறித்து விடுதியின் உரிமையாளர் கூறுகையில், பொருளாதார நெருக்கடி எங்கள் தொழிலையும் பாதித்து உள்ளது. அதனால் இந்த தள்ளுபடியை அறிவித்து உள்ளோம். இந்த தள்ளுபடி காரணமாக கூடுதலாக வாடிக்கையாளர்களை பெற முடியும் என்று நம்புகிறோம். சைக்கிளில் வரும் வாடிக்கையாளர்களால் சுற்றுச்சூழலுக்கும், எங்கள் தொழிலுக்கும் நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடுதியில் 45 நிமிடத்துக்கு 4 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சைக்கிளில் அல்லது பேருந்தில் வந்தால் 250 ரூபாய் தள்ளுபடி கொடுக்கப்படும். இந்த தள்ளுபடிக்குப் பிறகு எங்களது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என்று கூறுகிறார் விடுதியின் உரிமையாளர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஜாக்கிரதையாக வாழுங்கள் - எய்ட்ஸ் பிரச்சாரம்
» கவரிங் நகை அணிந்தால்
» ஆயில்யம் நட்சத்திரம் பெண்ணை மணந்தால்...
» தயிரை சாப்பிட்டு வந்தால்
» வீட்டில் வளர்ப்புப் பிராணிகள் இருந்தால்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum