தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பேஸ்மேக்கர்

Go down

பேஸ்மேக்கர்  Empty பேஸ்மேக்கர்

Post  meenu Wed Feb 27, 2013 2:49 pm

நவீன தொழில்நுட்ப
வளர்ச்சியால் உலகில் ஏற்படும் பல மாற்றங்கள்... கண்டுபிடிப்புகள்... நம்மை
ஒரு நிமிடமாவது பிரமிக்க வைக்கிறது. அதிலும் மருத்துவத் துறையின்
கண்டுபிடிப்புகள் குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவிற்கு வளர்ந்து வருகிறது.
குணப்படுத்த முடியாத நோயே இல்லை என்ற நிலை வரும் காலம் நம் அருகில் தான்
உள்ளது. விரைவில் அதை நம் ஆராய்ச்சியாளர்கள் தொட்டு விடுவார்கள் என்பதில்
எந்த ஐயமும் கிடையாது.


மருத்துவத்துறையின்
நவீன கண்டுபிடிப்புகளில் ஒன்று தான் இந்த டிஜிட்டல் பேஸ்மேக்கர்.
மனிதனுக்கு மிக முக்கிய உறுப்பாக செயல்படுவது இதயம். இதில் சிறிய கோளாறு
ஏற்பட்டாலும் உடனே சிகிச்சை செய்ய வேண்டும். ஆரம்ப நிலையில் கண்டுபிடித்து
உடனே சிகிச்சை செய்யாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகி விடும்.


பேஸ்மேக்கர்

பேஸ்மேக்கர்
என்பது மனிதனின் இதயத்துடிப்பை சமச்சீராக அமைத்து சாதாரண வாழ்க்கைக்கு
உதவுகிறது. சாதாரணமாக ஒரு மனிதனுக்கு இதயத்துடிப்பானது ஒரு நிமிடத்திற்கு
70க்கு மேல் 100க்குள் துடிக்க வேண்டும். 70க்கு குறைந்தாலும் 100க்கு மேல்
அதிகரித்தாலும் ஆபத்து தான். இந்த வகையில் பாதிக்கப்படுபவர்களுக்கு
கைகொடுப்பது தான் இந்த பேஸ் மேக்கர்.


கடந்த
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பேஸ்மேக்கர் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் பல
நவீன தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் பேஸ்மேக்கர் கண்டுபிடிக்கப்பட்டது
கடந்த ஆண்டு தான். உலகின் எங்கோ ஒரு மூலையில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த
கருவி மெல்ல இந்தியாவிற்குள் நுழைந்து தற்போது சென்னையில்
பிரபலமாகியுள்ளது.


சென்னை முகப்பேரில் உள்ள ப்ரெண்டியர் லைப் லைன் (Frontier Lifeline) மருத்துவமனையானது
இந்த பேஸ்மேக்கர் சிகிச்சையை தற்போது செய்து வருகிறது. இந்த சிகிச்சையை
தொடங்கி சில மாதங்களே. ஆனால் இது வரை சுமார் 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சை
பெற்று நலமுடன் வாழ்ந்து வருவதாக கூறுகிறார் இம்மருத்துவமணையின் இருதய
நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் ஜாய் எம். தாமஸ்.

இது குறித்து அவர் மேலும் கூறியது!

ஒரு
மனிதன் சாதாரண வாழ்க்கையை சரிவர தொடர்வது என்பது அவன் இதயத்துடிப்பில்
தான் உள்ளது. அதில் மாற்றம் ஏற்பட்டால் அசாதாரண வாழ்க்கை நிலை தான்
தொடரும். இந்த இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 70 முதல் 100க்குள் இருக்க
வேண்டும். குறைந்தாலும் சரி, அதிகரித்தாலும் சரி ஆபத்து தான். இதை
கட்டுபடுத்தவே பேஸ்மேக்கர் என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டது.


50க்கு
கீழ் இதய துடிப்பு இருந்தால் அடிக்கடி மயக்கம் ஏற்படும். தன்னையறியாமலேயே
கால்கள் தடுமாறி கீழே விழுந்து விடுவார்கள். 30க்கு கீழ் இருந்தால் மிகவும்
ஆபத்தான நிலையில் சுயநினைவினை இழந்து விடுவார்கள். 20க்கு கீழ் இருந்தால்
உடனே இறப்பு தான். 100க்கு மேல் போனாலும் மேற்கண்ட மாற்றங்கள் வரும். இது
போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.


இந்த
பேஸ் மேக்கர் கருவி, மனிதனின் மார்பு பகுதியில் இடதுபுறத்தின் உள்ளே
பொருத்தப்படுகிறது. இந்த எலெக்ட்ரானிக் பேஸ் மேக்கர் கருவியானது இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பையும் கட்டுப்படுத்தி சமச்சீராக்குகிறது.


இந்த
பேஸ் மேக்கரிலேயே மிகுந்த நவீனத்தில் சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது
தான் டிஜிட்டல் பேஸ் மேக்கர். இது மிக துல்லியமாக தன் விபரங்களை டிஜிட்டல்
முறையில் தெரிவிக்கும். இது 4 முதல் 5 செ.மீ. வரையில் தான் இருக்கும். இந்த
கருவி பொருத்தியவர்கள் தொடர்ந்து 6 மாதங்கள் செக்அப் செய்து கொண்டே இருக்க
வேண்டும். கருவி பொருத்தப்பட்டவர்கள் சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன்
எடுக்க கூடாது. அதற்கு இதய நோய் மருத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற
வேண்டும்.


ஒரு
முறை பொருத்தி விட்டால் போதும், அதற்குரிய காலக்கட்டம் முடிந்தவுடன்
பேட்டரியை மட்டும் மாற்றினால் போதும். பேஸ் மேக்கர் 6 முதல் 7 ஆண்டுகள் வரை
இருக்கும். டிஜிட்டல் 9 முதல் 10 ஆண்டுகள் வரை செயலாற்றும். இந்த
காலகட்டத்திற்குப் பிறகு பேட்டரியை மட்டும் மாற்றுவதற்கான கட்டணத்தை
செலுத்தி மாற்றிக் கொள்ளலாம் என்று டாக்டர் ஜாய் தாமஸ் கூறினார்.


கட்டணங்கள்

டிஜிட்டல் பேஸ் மேக்கரில் dual chamber (டுயல் சேம்பர்) பேஸ் மேக்கர் பொருத்த 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும், Analog பேஸ் மேக்கர் பொருத்த 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும் செலவாகும். மேலும் (சிங்கில் சேம்பர்) single chamber டிஜிட்டல்
பேஸ்மேக்கர் பொருத்த 85 ஆயிரம் ரூபாயும் செலவாகும். மொத்தமாக மருத்துவமனை
செலவுடன் சேர்த்து 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

பிறந்து
சில நாட்களே ஆன குழந்தைகளுக்கு கூட இந்த கருவியை பொருத்தலாம். வயது
வித்தியாசம் கிடையாது. இதை பொருத்துவதால் உடம்பில் வேறு எந்த மாற்றமும்
ஏற்படாது. சாதாரணமாகவே இயல்பாக வாழலாம். இதுவரை நாங்கள் 10க்கும்
மேற்பட்டவர்களுக்கு பொருத்தியுள்ளோம். அவர்கள் எந்த பிரச்சனையும் இன்றி
சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறினார் டாக்டர் ஜாய் எம். தாமஸ்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum