இதய நோய்களைக் கட்டுப்படுத்த தேசியத் திட்டம் துவக்கம்!
Page 1 of 1

நமது நாட்டில் அதிகரித்து வரும் இதய நோய்கள், நீரிழிவு, மாரடைப்பு போன்ற வாழ்க்கை முறையுடன் தொடர்புடைய நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான தேசியத் திட்டத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது.
முன்னோடித் திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இத்திட்டத்தை முதல் கட்டமாக நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மத்தியத் திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா துவக்கி வைத்தார்.
இதற்காக தேர்வு செய்யப்பட்ட திருவனந்தபுரம் (கேரளா), காம்ருப் (அஸ்ஸாம்), காஞ்சிபுரம் (தமிழ்நாடு), ஜலந்தர் (பஞ்சாப்), ஷிமாகா (கர்நாடகா), பில்வாரா (ராஜஸ்தான்), நெல்லூர் (ஆந்திரா) ஆகிய 7 மாவட்டங்களில் இருந்த வந்திருந்த பிரதிநிதிகளுக்கு, இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதியுதவியையும் அலுவாலியா வழங்கினார்.
1 கோடி பேருக்கு இதய நோய்!
புது டெல்லியில் இன்று நடந்த தேசியத் திட்டத்தின் தொடக்க விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். அவர் பேசியதாவது:
நமது நாட்டில் சுற்றுச் சூழல் சீர்கேட்டின் காரணமாகப் பரவும் இதய நோய்கள், நீரிழிவு, மாரடைப்பு போன்ற தொற்றாத நோய்கள், பொது சுகாதாரத்திற்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகிறது.
குழந்தைகள், பெண்கள் உள்பட சராசரியாக 1 கோடி பேர் இதய நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சராசரியாக 2 லட்சம் குழந்தைகள் பிறக்கும் போதே இதயக் கோளாறுகளுடன் பிறக்கின்றன.
எல்லா மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ள இந்தத் தேசியத் திட்டத்திற்கு 11 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் மொத்தம் ரூ.1,620.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உதிரப் போக்கைக் கட்டுப்படுத்த
» கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் புதிய மருந்து!
» நீரிழிவைக் கட்டுப்படுத்த சி வைட்டமின்
» சரும வளர்ச்சியை கட்டுப்படுத்த
» புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum