தலைவலிகள் பல வகைப்படும்
Page 1 of 1
தலைவலிகள் பல வகைப்படும்
நாம் ஒவ்வொருவரும் ஒரு முறையாவது தலைவலியினால் அவதிப்பட்டவர்களே. ஒரு சிலர் தொடர்ந்து தலைவலியினால் அவதிப்பட்டு வருபவர்களாகவும் இருப்போம்.
பொதுவாக தலைவலிகள் தற்காலிகமாக வந்து தாமாகவே நீங்கக்கூடியவைதான். ஆனால் தாங்க முடியாத அளவிற்கு தலைவலி இருக்குமேயானால் மருத்துவரை அணுகுவது நல்லது. தலைவலியானது தீவிர பாதிப்பிற்குரியதா, அடிக்கடி வரக்கூடியதா அல்லது ஏதேனும் ஒரு காரணத்தால் ஏற்பட்டதா என்பதை பரிசோதித்து மருத்துவர் மருந்து தருவார்.
தலைவலிகளில் பல வகைகள் உள்ளன. பரபரப்புத் தன்மை (டென்ஷன்) காரணமாக ஏற்படும் தலைவலி, மைக்ரேன் எனப்படும் ஒற்றைத்தலைவலி, தொகுப்புத் தலைவலி எனத் தலைவலிகளைப் பல வகைப்படுத்தலாம். ஒற்றைத் தலைவலி மற்றும் தொகுப்புத் தலைவலி ஆகியவை இரத்தக்குழாய் சம்பந்தப்பட்ட தலைவலிகளின் வகைகளாகும். அளவுக்கு மீறிய அதிக உடல் உழைப்பும் இத்தலைவலியை அதிகப்படுத்துகின்றது. தலைப்பகுதியைச் சுற்றிலும் உள்ள திசுக்களில் ஓடக்கூடிய இரத்தக் குழாய்கள் விரிவடைவதாலோ அல்லது வீங்குவதாலோ, தலையைக் குத்துவது போன்றோ அல்லது அடிப்பது போன்றோ வலிக்கச்செய்யும். தற்காலத்தில் ஒற்றைத்தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது.
எல்லா தலைவலிகளுக்கும் மருத்துவ உதவி தேவை இல்லை. சில தலைவலிகள் சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாததாலும், ஒவ்வாமையாலும், தசைப்பிடிப்பாலும் ஏற்படும். அவைகளை வீட்டிலேயே சரி செய்து கொள்ளலாம். தொடர்ந்து ஒரு சூழ்நிலையில் ஏற்படும் தலைவலி தீவிரமானவையாக இருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே மருத்துவ உதவி அவசியம்.
WD
எல்லோருக்கும் பரபரப்பு அல்லது தசைச் சுருக்கத் தலைவலிகள் பொதுவாகத் ஏற்படக்கூடியவை. ஒருவரிடம் அதிக மன அழுத்தம் இருக்கும் காலம் வரை தொடர்ந்து வலியும் இருக்கும்.
பரபரப்புத் தலைவலிகளுடன் தொடர்புடைய வலியானது குறைந்த அளவில் இருந்தாலும் சில நேரத்திற்கு நீடித்து இருக்கக் கூடியதாகவும் இருக்கும். நெற்றி, தலைப்பொட்டு, கழுத்தின் பின்பகுதியில் இந்த வலியை உணரலாம்.
பரபரப்புத் தலைவலி சிலருக்கு அவ்வப்போது வந்து போனாலும், மன அழுத்தம் இருக்கும் காலகட்டங்கள் வரை மட்டுமே தலைவலியும் நீடிக்கும். பிறகு அது தானாகவே நின்று விடும். ஆனால் சில தலைவலிகளுக்கு ஏதேனும் காரணம் இருக்கலாம்.
சைனஸ் பிரச்சினையும் ஒரு காரணம். சைனஸ் தலைவலிகள் சைனஸ் நோய் அல்லது அலர்ஜியின் காரணமாக வரும். சளி அல்லது ஃப்ளூ காய்ச்சலைத் தொடர்ந்து சைன பாதைகள், மூக்கின் மேற்புறம் மற்றும் பின்புறம் உள்ள எலும்புகளில் உள்ள காற்றறைகள் ஆகியவற்றில் ஏற்படும் அழற்சியால் சைனஸ் தலைவலிகள் ஏற்படும். சைனஸ் பகுதிகளில் அடைப்பு அல்லது கிருமிகளின் பாதிப்பு அதிகமாகும் போது தலையில் வலி உண்டாக ஆரம்பிக்கும். இவ்வலியானது தீவிரமாகவும், தொடர்ந்தும் இருக்கும். இவ்வலி தலை குனிந்தால் துடிக்கச் செய்யும் அளவுக்கு வலிக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஹெர்னியா எனப்படும் குடலிறக்கம்
» உதிரப் போக்கைக் கட்டுப்படுத்த
» மிளகைக் கொண்டு செய்யப்படும் கை வைத்தியம்
» இதய நோய்களைக் கட்டுப்படுத்த தேசியத் திட்டம் துவக்கம்!
» சரும வளர்ச்சியை கட்டுப்படுத்த

Permissions in this forum:
You cannot reply to topics in this forum