வளரும் நாடுகளைத் தாக்கும் தோல்நோய்: வல்லுநர்கள் எச்சரிக்கை!
Page 1 of 1

தென்கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட வளரும் நாடுகளில் ஒருவகையான சொறி, சிரங்கு நோய் அண்மைக் காலமாக அதிக அளவில் குழந்தைகளை தாக்கி வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஒவ்வாமை நிபுணர்கள் ஒருங்கிணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். உலகம் முழுவதும் ஒவ்வாமை நோய் தொடர்பான மருத்துவ பதிவேடுகளைஆய்வு செய்ததில் கடந்த 5 முதல் 10 ஆண்டுகலில் இந்நோய் தாக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைப் பருவத்தில் உள்ளவர்களையே அதிகம் பாதிப்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இதற்கு சற்றுச் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணம் என்றுவல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளை பொதுவாக இந்நோய் 13 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளையே இதிகம் பாதிப்பதாகவும், ஒரு காலத்தில் இங்கிலாந்து, நியுசிலாந்து ஆகிய நாடுகளில் இந்நோயின் தாக்கம் அதிகம் இருந்ததாகவும் தற்போது குறைந்துள்ளதாகவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மரபணுக்கள் குறைந்த கால இடைவெளியில் மிகப்பெரிய அளவில் நோய்க் கிருமிகளை பரவச்செய்ய இயலாது என்றும், இந்நோய் பரவுவதற்கான முக்கிய காரணி சுற்றுச் சூழல் தான் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டிங்காம் பல்கலைக் கழகத்தின் தோல் தொற்று நோய் மையத்தின பேராசிரியர் ஹேய்வெல் வில்லியம்ஸ் தலைமையிலான ஆய்வுக் குழுவினர், உலகில் உள்ள பல்வேறு நாடுகள் மேல்தோல் தொற்று வியாதியை தங்களின் பொதுச் சுகாதாரத்திட்டத்தின் மூலம் எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்த ஆய்வில் 55 -க்கும் மேற்பட்ட நாடுகளுக்குட்பட்ட 105 மண்டலங்களில் வாழும் 13, 14 வயது நிறைந்த மூன்று லட்சத்துக்கும் அதிகமான இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 6, 7 வயதான 35 நாடுகளில் வாழும் 65 மண்டலங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 90 ஆயிரம் குழந்தைகளின் மருத்துவ அறிக்கைகள் ஆய்விற்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
13 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடையே வளர்ந்த நாடுகளான இங்கிலாந்து, அயர்லாந்து, சுவீடன், ஜெர்மனி, நியுசிலாந்து ஆகியவற்றில் இந்நோயின் வீச்சு குறைந்துள்ளது. அதே நேரத்தில் மெக்ஸிக்கோ, சிலி, கென்யா, அல்ஜிரியா மற்றும் 7 தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்நோய் வெகுவேகமாக பரவியுள்ளது. கடந்த 5 முதல் 10 ஆண்டுகளில் 6,7 வயது குழந்தைகளை இந்நோய் அதிகமாக பாதித்துள்ளதாகவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த முறை நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் உலகம் முழுவதும் இந்நோய் பரவுவதற்கான காரணியைக் கண்டறிந்துள்ளோம். சுற்றுச் சூழல் தான் அந்தக் காரணி. சொறி, சிரங்கு அதிக அளவில் பரவ காரணமானவற்றைக் கண்டறிந்து தடுக்கவிட்டால் வளரும் நாடுகளில் இந்நோய் மேலும் பலரை தாக்கும் என்றும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வளரும் நாடுகளைத் தாக்கும் தோல்நோய்: வல்லுநர்கள் எச்சரிக்கை!

» கர்ப்ப கால மசக்கைக்கு ஏற்ற நாரத்தங்காய்
» மாற்றிப் பாருங்கள் வாழ்க்கை இனிக்கும்
» பெற்றோருக்கு எச்சரிக்கை தேவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum