தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords

temple  


காலை உணவிற்கு பரோட்டா சிறந்தது

Go down

காலை உணவிற்கு பரோட்டா சிறந்தது 	 Empty காலை உணவிற்கு பரோட்டா சிறந்தது

Post  meenu on Tue Feb 26, 2013 5:26 pm

மற்ற எந்த உணவுகளையும் விட கோதுமையில் செய்யப்பட்ட சப்பாத்தி, பரோட்டாக்கள் உடலுக்கும், மனதுக்கும் உடனடியான சக்தியையும், சோர்வில் இருந்து தசைகளை மீட்பதிலும், நாடித் துடிப்பை சீராக்குவதிலும், உற்சாகத்தை அளிப்பதிலும் மிகவும் சிறந்ததாக உள்ளது.

பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சத்துணவு நிபுணர்களான மருத்துவர் ஜே.எஸ். சித்து, மருத்துவர் எஸ். வெர்மா ஆகியோர் நடத்திய ஆய்வில், மற்ற நேர உணவுகளை விட காலை உணவு என்பது உடலுக்கு மிகவும் முக்கியமான ஆதரமாக விளங்குகிறது. எனவே மிகவும் சத்துள்ள உணவை காலை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சுமார் 80 குடும்பங்களிடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அவர்களின் 11 விதமான காலை உணவு முறைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பஞ்சாப் மக்கள் பொதுவாக எடுத்துக் கொள்ளும் காலை உணவுகளான பூரணம் வைத்த பரோட்டா, பரோட்டா, சப்பாத்தி, காய்கறி மற்றும் சான்ட்விட்ச் போன்றவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

ஒவ்வொரு பரோட்டாக்களும் 40 கிராம் கோதுமை மாவால் செய்யப்பட்டதாகவும், பல்வேறு வகையான பூரணங்கள் அடங்கியதாகவும் இருக்கும். உருளைக் கிழங்கு, வெள்ளரிக்காய், தக்காளி போன்றவையும் பரோட்டாவுடன் உணவாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆய்வு முடிவில், ஒவ்வொரு பரோட்டாவும் 4.2 முதல் 5.0 கிராம் வரையிலான புரதச் சத்துடனும், 209 முதல் 258 கிலோ கலோரியையும் (சக்தி) பெற்றிருந்தது.

புரதச்சத்தில், சப்பாத்திக்கும், பரோட்டாவிற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஆனால், பரோட்டாவை தயாரிக்கும் போது அதில் உள்ள கொழுப்புசத்து வெளியேறிவிடுவதால் கலோரி மட்டும் அதிகரிக்கிறது என்கிறது இந்த ஆய்வு.

ஆனால் பெரும்பாலும் காலை உணவுக்குப் பயன்படும் 100 கிராம் ரொட்டிகளில் 2.28 கிராம் புரதமும், 69 கிலோ கலோரி மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

100 கிராம் பரோட்டாவில் குறைந்தது 101.23 மில்லி கிராம் முதல் 18.50 மில்லி கிராம் வரையிலான கால்சியம் அடங்கியிருப்பதும் ஆய்வில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

ரொட்டியில் அடங்கியிருக்கும் கால்சியத்தின் அளவும் மிகக் குறைவாகவே இருக்கிறது.

வெந்தயக் கீரை சேர்த்து செய்யப்படும் பரோட்டாவில் அதிகமான இரும்புச் சத்தும் உள்ளது. இதுபோன்று காளிபிளவர், உருளைக் கிழங்கு போன்ற காய்கறிகளை சேர்த்து செய்யும் பரோட்டாக்களும் உடலுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை அளிக்கிறதாம்.

அதன்படி இதுபோன்று முறையான ஊட்டச் சத்து மிக்க காலை உணவை எடுத்துக் கொள்ளும் மனிதனின் உடல், வரும் நாட்களில் தவரவிடும் காலை உணவுக்கான சக்தியையும் சீர் செய்துவிடுகிறது என்கிறது அந்த ஆய்வு.

காலையில் வெகு சீக்கிரம் எடுத்துக் கொள்ளும் காலை உணவு, நமது உடலை மிக ஆரோக்கியமாகவும், சரியான உடல் எடையில் நீடிக்கவும் உதவுகிறது. சத்தான காலை உணவுக்கு நிகராக எந்த உணவும் இருந்துவிடாது என்று அந்த நிபுணர்கள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum