தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords

temple  


காலை உணவைத் தவிர்க்கலாமா?

Go down

காலை உணவைத் தவிர்க்கலாமா?  Empty காலை உணவைத் தவிர்க்கலாமா?

Post  meenu on Tue Feb 26, 2013 4:41 pm

இன்றைய நாகரீக உலகில் உடல் ஆரோக்கியம் என்பது அனைவருக்குமே தேவை என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.

நடந்து செல்லக்கூடிய தொலைவிற்குக் கூட இருசக்கர வாகனத்திலோ அல்லது காரிலோ சென்று விட்டு, சிறிது காலம் கழித்து கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்வோரை பார்க்கிறோம்.

அதெல்லாம் எதற்குங்க? அன்றாடம் சில யுத்திகளைக் கையாண்டால், வாழ்நாள் முழுவதும் நலமுடனும், ஆரோக்கியத்துடனும் வாழலாம்.

அவை என்னென்ன என்கிறீர்களா?

காலை உணவைத் தவிர்க்காமல் தினமும் சாப்பிடுங்கள். காலை உணவு சாப்பிடுவதால், உடலில் அதிக வைட்டமின்களும், தேவையான சத்துகளும் உடலுக்கு சேர்கின்றன. காலை உணவைத் தவிர்ப்பதால் பிற்காலத்தில் நீரிழிவு, உடல் எடை அதிகரிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

உடல் ஆரோக்கியத்திற்கு போதிய அளவு தூக்கம் அவசியம். சுமார் 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் இல்லாதவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

உலக அளவில் 75 விழுக்காட்டினர் சிறு உடற்பயிற்சிகளைக் கூட செய்வதில்லை. குறைந்தது தினமும் 1 கிலோ மீட்டர் அளவுக்காவது நடக்க வேண்டும். இதுவே மிகப்பெரிய உடற்பயிற்சியாக அமையும்.

உடல் ஆரோக்கியத்தில் பல் பாதுகாப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. பற்களை ஆரோக்கியமாகக் காத்துக் கொள்வதன் மூலம் ஆயுளில் சுமார் 6 வருடத்தைக் கூட்ட முடியும் என்று மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.

நாம் உண்ணும் மீன் வகைகளில் ஒமேகா-3 எனும் அமிலம் உள்ளது. இது அலர்ஜி, ஆஸ்த்மா, தலைவலி, இதயம் தொடர்பான நோய்களைத் தடுக்கிறது.

எண்ணெயில் பொறித்த பொருட்களைக் காட்டிலும், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிடுங்கள், காய்கறிகளைக் கூட எண்ணெயில் வதக்காமல், வேகவைத்து சாப்பிட வேண்டும். தேநீர் அவசியம் எனில் பால் இல்லாமல் குடித்தல் உடலுக்கு சிறந்தது.

உடலில் பாதிக்கும் மேற்பட்ட அளவு உள்ள தண்ணீரை, பலர் அவ்வப்போது குடிக்க மறந்து விடுவதாலேயே பல நோய்கள் ஏற்படுகின்றன.

தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால், இதயநோய், சிறுநீரகக் கற்கள், உயர் இரத்த அழுத்தம் உட்பட பல நோய்களைத் தடுக்க ஏதுவாகிறது. உடல் எடை அதிகரிக்காமல் இருக்கவும் உதவுகிறது.

வாழ்க்கைக்கு மிக மிக அவசியமான ஒன்று பொழுதுபோக்கு. ஏதாவது ஒரு பொழுதுபோக்கை தேர்ந்தெடுத்து, மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி தரும் வகையில் அதனை மேற்கொள்ளலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum