பல் அணிகலனால் உடல் நலத்திற்கு ஆபத்து?
Page 1 of 1
பல் அணிகலனால் உடல் நலத்திற்கு ஆபத்து?
திருமணம்... வாழ்க்கையில் ஒருமுறை நிகழும் இந்த ஒரு வைபவத்திற்காக எவ்வளவோ தொகை செலவிடுவதை அறிகிறோம்.
தங்க ஆபரணங்கள், நகைகள், பட்டுப் புடவைகள் உள்ளிட்ட ஆடைகள், மேக்கப் வகையறாக்கள் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்கள் என பெருமளவு தொகையை செலவிடுவதையும் கேள்விப்படுகிறோம்.
வெளிநாடுகளைப் பொருத்தவரை மணப்பெண்கள், இவற்றைத் தவிர்த்து பற்களில் பொருத்திக் கொள்ளக்கூடிய சில வகை விலையுயர்ந்த கற்கள் மற்றும் ஆபரணங்களையும் வாங்கி அணிகிறார்கள்.
தற்போது வெளிநாட்டு மணப்பெண்களைப் பின்பற்றி இந்தியாவிலும், பற்களில் அணிகலன்கள் அணியக்கூடிய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பொதுவாக இளம் பெண்கள் திருமணத்திற்கு முன் தங்களின் குடும்ப பல் மருத்துவரை அவ்வப்போது அணுகி பற்சிதைவு, பல் பாதுகாப்பு, கறைகளை நீக்குதல் போன்ற சிகிச்சைகளை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் திருமணத்தின் போது தற்போது பற்களுக்கான அணிகலன்களை அணியும் நாகரீகமும் பெருகி வருகிறது.
பற்களில் ஆபரணங்களை அணிய ஏதுவாக சற்றே இயற்கையாக அமைந்த சுகாதாரமான பல்லின் ஒரு பகுதியை ட்ரில்லிங் எனப்படும் தேய்த்தல் மூலம் சரிசெய்ய வேண்டியுள்ளது. அதன்பின் ஆபரணங்களைப் பொருத்திக் கொள்கிறார்கள்.
நன்றாக இருக்கும் பற்களை தேய்த்து சேதப்படுத்துவதன் மூலம் அதனால் ஏற்படும் விளைவுகள் சில நேரங்களில் வேறு சில உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்த நேரிடுவதாக பல் மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
மாறிவரும் நாகரீகத்திற்கு ஏற்ப மாறிக் கொள்ள வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை என்றாலும், நன்றாக இருக்கும் பற்களை நாகரீகம் என்ற பெயரால் சேதப்படுத்தலாமா?
பல் அணிகலன் மட்டுமல்லாமல், பற்களை பாலிஷ் செய்வது, வெண்மைப்படுத்துவது, மணப்பெண்கள் சுவாசத்தை நிர்வகிப்பது போன்றவை குறித்தும் தலைநகர் டெல்லியில் புதிய நிறுவனமான கான்ஃபிஸ்மைல் எனப்படும் பல் அணிகலன் நிறுவனம் விரைவில் அமையவிருக்கிறது.
இங்கு மணப்பெண்களுக்கு அளிக்கப்படும் சுவாசப் பயிற்சியானது நீண்டகால அடிப்படையில் பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்றாலும் பல் அணிகலன் என்பது சீரான பற்கள் வரிசைக்கு தீங்கை ஏற்படுத்தக்கூடும் என்பதோடு, உடல் நலத்தையும் பாதிக்கக்கூடியது என்பதே பல் சிகிச்சை நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
எனவே பற்களில் அணிகலன் அணிவது வெறும் அழகுசாதனப் பொருட்களுடன் தொடர்புடையதே தவிர, உடல் ஆரோக்கியத்திற்கு எந்தப் பலனையும் அளிக்காது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பல் அணிகலனால் உடல் நலத்திற்கு ஆபத்து?
» பல் அணிகலனால் உடல் நலத்திற்கு ஆபத்து?
» அதிக உப்பால் உடல் நலத்திற்கு ஆபத்து
» உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயற்கை பொருட்கள்
» 'ஹூக்கா'வும் உடல் நலத்திற்கு தீங்கானதே : ஆய்வு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum