தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords

temple  


இறந்தும் வாழும் ஹிதேந்திரன்

Go down

இறந்தும் வாழும் ஹிதேந்திரன் Empty இறந்தும் வாழும் ஹிதேந்திரன்

Post  meenu on Tue Feb 26, 2013 4:29 pm

திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த டாக்டர் தம்பதி அசோகன் - புஷ்பாஞ்சலி. இவர்களின் மூத்த மகன் ஹிதேந்திரன்.

அங்குள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த ஹிதேந்திரனை சாலை விபத்தினால் ஏற்பட்ட தலைக்காயத்தில் இருந்து டாக்டர்களால் காப்பாற்ற முடியாமல் போயிற்று.

ஹிதேந்திரன்
webdunia photo FILE
இந்த நேரத்தில் தான், ஹிதேந்திரனின் பெற்றோர் ஒரு முடிவுக்கு வந்து தங்கள் மகன் இறந்தும் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில், அவனது அனைத்து உறுப்புகளையும் தானமாக அளிக்க முன்வந்து, தங்கள் விருப்பத்தை மகன் அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துமனை டாக்டர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சமயோசிதமாகச் செயல்பட்ட மருத்துவர்கள் சென்னை ஜெ.ஜெ. நகர் முகப்பேரில் உள்ள டாக்டர் கே.எம். செரியன் இருதய மருத்துவமனையுடன் தொடர்பு கொண்டு, இருதய தானம் குறித்து தெரிவித்தனர்.

அவர்களும் தங்கள் பங்கிற்கு, இருதயம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த பெங்களூருவைச் சேர்ந்த அபிராமி என்ற 9 வயது சிறுமிக்கு ஹிதேந்திரனின் இருதயத்தைப் பொருத்த முடிவு செய்தனர்.

சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு பெங்களூருவில் இருந்து அவர்களை வரவழைத்து, செரியன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டனர்.

சரி, அறுவை சிகிச்சையை செய்வதற்கு முன்பாக தேனாம்பேட்டையில் இருந்து எப்படி 30 நிமிட நேரத்திற்குள் முகப்பேரில் உள்ள மருத்துவமனைக்கு இருதயத்தைக் கொண்டுவருவது? என்று டாக்டர்கள் யோசித்த போதுதான், காவல்துறையினரின் உதவியை நாடுவது என்று முடிவானது.

அதன்பிறகே கடந்த 23ம் தேதி பிற்பகல் 2.50 மணிக்கு தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட இருதயம், முகப்பேர் டாக்டர் கே.எம். செரியன் மருத்துவமனைக்கு 10 நிமிட நேரத்திற்குள் வந்து சேர்ந்து, தற்போது சிறுமி அபிராமிக்கு பொருத்தப்பட்டு சீராக துடித்துக் கொண்டிருக்கிறது.

சுமார் 5 மணி நேரம் செரியன் தலைமையிலான டாக்டர்கள் குழு தீவிரமாக சிகிச்சை மேற்கொண்டு வெற்றிகரமாக இருதயத்தை சிறுமிக்கு பொருத்தி விட்டனர்.

சில மணி நேரம் வென்டிலேட்டர் உதவியுடன் இயங்கிய ஹிதேந்திரன் (தற்போது அபிராமியின்) இருதயம் வென்டிலேட்டர் அகற்றப்பட்ட பின் சரிவர இயங்குவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மயக்கம் தெளிந்த சிறுமி அபிராமி, டாக்டர்களின் கட்டளையை ஏற்று செயல்பட்டதாகவும், கண்விழித்து பெற்றோரைப் பார்த்ததாகவும் டாக்டர்கள் கூறினர்.

இதுபோன்ற இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பது இந்தியாவிலேயே 2வது முறை என்று டாக்டர் மது சங்கர் கூறினார்.

அறுவை சிகிச்சைக்காக இருதயம் காவல்துறையின் காரில் பயணித்திருப்பது இதுவே முதல்முறை.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum