தேங்காய், மாங்காய் சாதம்
Page 1 of 1
தேங்காய், மாங்காய் சாதம்
புளிப்பு இல்லாத சிறிய மாங்காய் - 1,
தேங்காய் - அரை மூடி,
சீரக சம்பா அரிசி - 2 கப்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க:
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்,
தனியா - அரை டேபிள் ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2.
தாளிப்பதற்கு:
கடுகு - அரை டீஸ்பூன்,
கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை - தலா 1 டீஸ்பூன்,
மஞ்சள்தூள், பெருங்காயம் - தலா அரை டீஸ்பூன்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை சிறிது,
காய்ந்த மிளகாய் - 4.
அரிசியை உதிரி, உதிரியாக வேகவைத்து வடித்து வைத்துக் கொள்ளவும். மாங்காயை தோல் சீவி துருவி வைத்துக்கொள்ளவும். தேங்காயைத் துருவி வைத்துக்கொள்ளவும். கொத்தமல்லியை நறுக்கிக் கொள்ளவும். எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடிக்க வேண்டியதை பொடித்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வேர்க்கடலை, பெருங்காயம் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
பின் மாங்காய் மற்றும் தேங்காய்த் துருவலை போட்டு வதக்கி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்க வும். பிறகு வடித்து வைத்த சாதத்தையும், பொடித்து வைத்திருக்கும் பொடி மற்றும் மல்லித்தழையையும் கலந்து பரிமாறவும். அருமையான இந்த தேங்காய், மாங்காய் சாதம் தமிழ் வருடப்பிறப்புக்கு ஒரு ஸ்பெஷல் ஐட்டம். இதை அப்படியே சாப்பிடலாம். விரும்பினால் இதற்கு சைட் டிஷ் (ஃபிங்கர் சிப்ஸ், உருளைக்கிழங்கு அல்லது வாழைக்காய் அல்லது கருணைக்கிழங்கு வறுவல்) சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum