தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords

temple  


தலைமுடி உதிர்தலைத் தடுக்க...

Go down

தலைமுடி உதிர்தலைத் தடுக்க... Empty தலைமுடி உதிர்தலைத் தடுக்க...

Post  meenu on Tue Feb 26, 2013 2:07 pm

சங்க
இலக்கியங்களில் பெண்களைப் பற்றி குறிப்பிடுகையில் கார் கூந்தல் அழகி
என்றும், கூந்தலைப் பாயாக விரித்தாள் என்றும் வர்ணிப்பதை அறிகிறோம்.


ஆனால், தற்காலைப் பெண்களில் எத்தனை பேருக்கு அடர்த்தியான, கருமை நிற கூந்தல் உள்ளது.

கூந்தல்
பராமரிப்பு என்பதே ஒரு தனிக்கலை எனலாம். பாட்டிமார், அம்மா, அக்காள்
போன்றவர்கள் உதவியுடன் கூந்தலை சிக்கெலெடுத்து, பின்னி, மலர்களால்
அலங்கரித்து சிங்காரிப்பதெல்லாம் இன்றையே அவசரகதி உலகில் சாத்தியமா?
நிச்சயம் இல்லை.


என்றாலும், ஒரு சில நடைமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் கூந்தலை சிறப்பாக பராமரிக்க முடியும்.

ரசாயனம்
கலந்த தைலங்கள் மற்றும் எண்ணெய், கிரீம் போன்றவற்றை தடவுவது, மனக்கவலை,
ஊட்டச்சத்துக் குறைபாடு, முறையற்ற பராமரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால்
தலைமுடி உதிர்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.


தலைமுடியில் வறட்சி ஏற்பட்டு நுனிப்பகுதியில் பிளவு ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனால் பெண்களின் கூந்தல் அழகு கெடுகிறது.

இந்தப்
பிரச்னைக்கு எளிதாகத் தீர்வு காண, நுனிப் பகுதியை அடிக்கடி சிறிய அளவில்
வெட்டி விட்டுக் கொள்ளலாம். மாதத்துக்கு ஒரு முறையாவது இப்படிச் செய்வது
பலன் அளிக்கும்.


மேலும்
மாதம் ஒருமுறை ஷாம்பூ தடவிய பின் நீண்ட நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.
சிறந்த நிறுவனங்களின் பிராண்டட் ஷாம்பூகளையே பயன்படுத்த வேண்டும்.
தலைமுடியை அதிக சூட்டில் உலர்த்த வேண்டாம்.


குளித்தவுடன்
ஈரத்துடன் முடியை சீவ வேண்டாம். வெளியில் செல்லும்போது தொப்பியை
உபயோகிக்கலாம். சூரிய ஒளியிலிருந்து முடியைப் பாதுகாக்கவும்.


கூந்தலை
பராமரிப்பதற்கென்ற சென்னை போன்ற நகரங்களில் ஏராளமான அழகு நிலையங்கள்
உள்ளன. முடிந்தால், அவ்வப்போது அதுபோன்ற அழகு நிலையங்களுக்குச் சென்று
கூந்தல் பராமரிப்பைக் கற்றுக் கொண்டு, பின் நீங்களாகவே வீட்டில்
பராமரிக்கலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum