தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords

temple  


இளைஞ‌னி‌ன் உட‌ல் உறு‌ப்புக‌ள் தான‌ம்

Go down

இளைஞ‌னி‌ன் உட‌ல் உறு‌ப்புக‌ள் தான‌ம்   Empty இளைஞ‌னி‌ன் உட‌ல் உறு‌ப்புக‌ள் தான‌ம்

Post  meenu on Tue Feb 26, 2013 1:44 pm

விப‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கி மூளை‌ச் சாவடை‌ந்த நாமக்கல் மாவட்டம் ராசிபுர‌த்தை‌ச் சே‌ர்‌ந்த த‌ண்டபா‌ணி‌யி‌ன் மக‌ன் ‌தினே‌ஷ‌்குமா‌‌ரி‌ன் (23) ‌‌உட‌ல் உறு‌‌ப்புக‌ள் தானம‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

23 வயதான தினேஷ் குமார் பிளஸ்-2 படி‌த்து‌‌வி‌ட்டு மில் ஒ‌ன்‌றி‌ல் வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் காலை இருச‌க்கர வாகன‌த்‌தி‌ல் ராசிபுரம் ரோட்டில் சென்று கொண்டிரு‌ந்த
போது எ‌திரே வ‌ந்த வாகன‌ம் அவ‌ர் ‌மீது மோ‌தியது. ‌விப‌த்‌தி‌ல்
‌சி‌க்‌கி தலை‌யி‌ல் பல‌த்த காயமடை‌ந்த ‌தினேஷ‌்குமாரை உடனடியாக
மரு‌த்துவமனை‌யி‌ல் சே‌ர்‌த்தன‌ர்.

பின்னர்
அங்கிருந்து சேலம் அரியானூரில் உள்ள விநாயகா மிஷன் ஹை-டெக்
மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தார்கள். அங்கு மூளை மற்றும்
நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள் பிரதீப், சமீர் மற்றும் மருத்துவ குழுவினர்
சிகிச்சை அளித
்து‌ம் பய‌னி‌‌ன்‌றி, தினேஷ் குமாரின் மூளை செய‌லிழ‌ந்தது. ஆனா‌ல் அவரது இதயம் உள்பட மற்ற உறுப்புகள் செயல்பட்டு கொண்டு இருந்தன.

இதையடுத்து
தினேஷ்குமாரின் தந்தை தண்டபாணியிடம் உடல் உறுப்புகளை தானம் செய்வது பற்றி
ஆலோசனை கூறினார்கள். இதை ஏற்றுக் கொண்ட தண்டபாணி தனது மகனின் உடல்
உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார். இது குறித்து சென்னை அப்பல்லோ
மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


மூளைச்சாவு ஏற்பட்ட தினேஷ் குமாரின் உடலை பாதுகாப்பாக ஆம்புலன்சில் எடுத்து வரு‌ம்படி சென்னை மரு‌த்துவ‌க் குழுவினர்
தெரிவித்தார்கள். இதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வேனில் நேற்று இரவு 8.30
மணிக்கு தினேஷ் குமாரின் உடல் சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டு, அவரது உட‌ல் உறு‌ப்புக‌ள், தேவை‌ப் படுபவ‌ர்களு‌க்கு அறுவை ‌சி‌கி‌ச்சை மூல‌ம் பொரு‌த்த‌ப்படு‌கிறது.

இது கு‌றி‌‌த்து ‌தினேஷ‌்குமா‌ரி‌ன் த‌ந்தை கூறுகை‌யி‌ல், ஹிதேந்திரன் தனது உடல் உறுப்புகளா‌ல்,
பிறரை வாழ வைத்து கொண்டு இருக்கிறார். எனது மகனின் உடல் உறுப்புகளால்
பிறர் வாழட்டும் என கருதி நான் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக்
கொண்டேன் எ‌ன்று கூ‌றினா‌ர்.

‌‌ஹ‌ிதே‌ந்‌திர‌னி‌ன்
உட‌ல் உறு‌ப்பு தான‌த்‌தி‌‌ற்கு‌ப் ‌பிறகு பொதும‌க்க‌ளிடையே உட‌ல்
உறு‌ப்பு தான‌ம் ப‌ற்‌றிய ‌வி‌ழி‌ப்‌புண‌ர்வு அ‌திக அள‌வி‌ல்
ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. ‌ஹ‌ிதே‌ந்‌திர‌‌னி‌ன் உட‌ல் உறு‌ப்புகளா‌ல் பல‌ர்
வா‌ழ்வது ம‌ட்டு‌மி‌ன்‌றி, இதுபோ‌ன்ற ஒரு ‌வி‌ழி‌ப்புண‌ர்வை
ஏ‌ற்படு‌‌த்‌தி மேலு‌ம் பலரையு‌ம் வா‌ழ‌ச் செ‌ய்து‌ள்ளா‌ர் எ‌ன்பதுதா‌ன்
கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum