சரியான சிகிச்சை கொடுக்காத பெற்றோருக்கு தண்டனை
Page 1 of 1

ஆஸ்ட்ரேலியாவில்
தங்களது 9 மாத குழந்தைக்கு ஏற்பட்ட நோய்க்கு சரியான சிகிச்சை
அளிக்காத காரணத்தால் உயிரிழப்பு நேரிடக் காரணமான இந்திய
வம்சாவளிப் பெற்றோருக்கு சிறைத் தண்டனை விதித்து
தீர்ப்பளித்துள்ளது சவுத் வேல்ஸ் உச்ச நீதிமன்றம்.
இந்திய
வம்சாவளியைச் சேர்ந்த தாமஸ் சாம் (42) ஆஸ்திரேலியாவில் ஹோமியோபதி மருத்துவ
கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி
மஞ்சுவுடன்(37) சிட்னியில் வசித்து வருகிறார். கடந்த 2002ம் ஆண்டு,
இவர்களது 9 மாத குழந்தை குளோரியாவுக்கு தோல் நோயால் பாதிப்பு
ஏற்பட்டது.
தாமஸ்
சாம் - மஞ்சு தம்பதிகள் தங்களது குழந்தைக்கு ஏற்பட்ட தோல்
நோய்க்கு ஹோமியோபதி முறையில் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் நோய்
குணமாகவில்லை. பதிலாக நோய் தீவிரமடைந்தது.
நோய்
தீவிரமடைந்த பிறகும், நவீன மருத்துவ சிகிச்சை அளிக்காத காரணத்தால் குழந்தை
இறந்தது. இதுகுறித்து, பெற்றோர் மீது சவுத் வேல்ஸ் உச்ச நீதிமன்றத்தில்
வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
கொடிய
தோல் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு, அவரது பெற்றோர் தொடர்ந்து ஹோமியோ
மற்றும் இயற்கை முறையில் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். உடல் முழுவதும்
நோய் பரவியதால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் நோய்
தீவிரமடைந்து குழந்தையின் முடி வெள்ளையாக மாறிய பிறகும், தோல் மருத்துவ
நிபுணரை அணுகவில்லை. நிலைமை மோசமான பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
குழந்தை, 3 நாளில் இறந்தது. பெற்றோரின் அலட்சியமே இதற்குக் காரணம் என வழக்கறிஞர் வாதாடினார்.
இந்த வழக்கு மீதான விசாரணை முடிவடைந்து அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதிபதி
பீட்டர் ஜான்சன் தனது தீர்ப்பில், குளோரியாவின் தீவிரமான தோல் நோய்க்கு
ஹோமியோபதி சிகிச்சை போதுமானதல்ல என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது
விஷயத்தில் பெற்றோரிடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. உரிய நேரத்தில்
குழந்தைக்கு சிகிச்சை அளிக்கத் தவறியதால், தாமசுக்கு 6 வருடமும்,
மஞ்சுவுக்கு 4 வருடமும் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதி தனது
தீர்ப்பில் கூறியுள்ளார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெற்றோருக்கு எச்சரிக்கை தேவை
» பெற்றோருக்கு எச்சரிக்கை தேவை
» கண்களுக்கு பார்வை கொடுக்க
» உயிர் கொடுக்கும் தொப்புள் கொடி
» நரம்பு வீக்க நோய்க்கு லேசர் சிகிச்சை
» பெற்றோருக்கு எச்சரிக்கை தேவை
» கண்களுக்கு பார்வை கொடுக்க
» உயிர் கொடுக்கும் தொப்புள் கொடி
» நரம்பு வீக்க நோய்க்கு லேசர் சிகிச்சை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum