குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்
Page 1 of 1
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்
முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் இருந்து கடற்கரை சாலையில் 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குலசை என்கிற குலசேகரன்பட்டினம். இங்குள்ள முத்தாரம்மன் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. இங்கு இறைவனும் (ஞானமூர்த்தீசுவரர்), இறைவியும் (முத்தாரம்மன்) ஒரே பீடத்தில் வீற்றிருந்து அருள்பாலிப்பது சிறப்பு.
இப்பகுதியை ஆட்சி செய்த குலசேகரப்பாண்டியன் என்ற மன்னனுக்கு இந்த முத்தாரம்மன் காட்சி கொடுத்ததால், `குலசேகரன்பட்டினம்' என்று இந்த ஊருக்கு பெயர் வந்ததாக கூறுகிறார்கள். சுயம்புவாக தோன்றிய ஞானமூர்த்தீசுவரரும், முத்தாரம்மனும் கருவறையில் வடக்கு திசை நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.
தற்போது உள்ள சுவாமி, அம்மன் சிலைகளின் பாதத்தில், சுயம்புவாக உருவான சிலைகள் உள்ளன. ஜோதிடத்தில் செவ்வாய் வீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் செவ்வாயும் இருந்தால் `பரிவர்த்தனை யோகம்' என்று கூறுவார்கள்.
அதுபோல் குலசேகரன்பட்டினத்தில் சுவாமியின் ஆற்றலை அம்பாள் பெற்று `சிவ'மயமாக உள்ளார். அம்பாள் ஆற்றலை சுவாமி பெற்று சக்தி மயமாக வீற்றிருக்கிறார். இது `பரிவர்த்தனை யோக நிலை' ஆகும். எனவே இங்கு அம்பாளின் அருளாட்சியே கோலோச்சுகிறது.
பிரசித்திபெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி விழா புகழ்பெற்றது. தசரா விழா என்று போற்றப்படும் இவ்விழா மைசூர் தசராவுக்கு அடுத்தபடியாக புகழ்பெற்றது. `முத்தாரம்மன்' பெயர் காரணம் பாண்டியநாடு முத்துக்களுக்கு சிறப்பு பெற்றது.
அத்தகைய முத்துக்கள் ஒன்றிணைந்து அம்பாளாக உருவம் கொண்டதால், `முத்தாரம்மன்' என்று பெயர் வந்ததாக சொல்கிறார்கள். கிராமங்களில் அம்மை நோயை, `முத்துப் போட்டதாகவும்' கூறுவார்கள். அப்படி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குலசேகரன்பட்டினம் வந்து மனம் உருகி வேண்டினால், முத்துக்களை மாற்றி அம்பாள் குணப்படுத்துவதாக ஐதீகம்.
அதாவது, முத்து+ஆற்று+அம்மன் = முத்தா(ற்ற)ரம்மன் என பெயர் வந்துள்ளதாக கருதப்படுகிறது. நவமணிகளில் `முத்து' மட்டும் பட்டை தீட்டப்படாமல் தானே ஒளிரும் தன்மை கொண்டது. அதேபோல் குலசேகரன்பட்டினத்தில் அம்பாள் தானே தோன்றி மக்களை பாதுகாத்து வருவதால் `முத்தாரம்மன்' நாமத்தில் அழைக்கப்படுகிறார் என்று பரவசப்படுகிறார்கள் பக்தர்கள்.
போக்குவரத்து வசதி:
இந்த கோவிலுக்கு செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அல்லது எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து தூத்துக்குடி அல்லது திருநெல்வேலி அல்லது திருச்செந்தூர் சென்று பின்னர் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்லலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முத்தாரம்மன் கோவில்
» முத்தாரம்மன் கோவில்
» முத்தாரம்மன் வரலாறு
» குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அமைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum